இலங்கையில் கடலுக்கு அடியிலான மின்சார விநியோகத் திட்டம் ஒன்றை
நடைமுறைப்படுத்த இந்தியா தயராகியுள்ளதாக அந் நாட்டு மின்சாரத் துறை அமைச்சு
தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் உள்ளூர் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் 500
மெகாவோட்ஸ் மின்சாரம் இந்த கடலுக்கடியிலான பொருத்துக்கள் மூலம் இலங்கைக்கு
கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ்வாறான திட்டங்கள் பங்களாதேஸ், நேபாளம், மியன்மார் ஆகிய
நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
DC


0 Comments