ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எல்.எம். பரீத் எழுதிய ‘ஹந்தஸ்ஸ அல்மனார்
தேசிய பாடசாலை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (09)
பாடசாலை அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ் (நளீமி) தலைமையில் நடைபெற்றது.
இதில் நூலாய்வை வழங்கிய அகில இலங்கை கல்வி மாநாட்டின் தலைவரும் பேராதனை
பல்கலைக்கழக மெய்யில்துறை தலைவருமான கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் தொடர்ந்தும்
குறிப்பிடுகையில்,
கல்வியை கூறுபோட்டு நோக்குவது கல்விக்கான சவலை சமூகத்தில்
ஏற்படுத்தியுள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும். எனவே நாம் மீண்டும் பல
தசாப்தங்களுக்குப் பின்னால் இருந்த நிலைக்குச் மீண்டும் செல்ல முடியாது.
எமது முன்னாள் தலைவர்களான அறிஞர் சித்தி லெப்பை , டீ.பி ஜாயா, அறிஞர்
ஏ.எம்.ஏ. அஸீஸ் , பதியுத்தீன் மஹ்மூத், எம்.எச்.எம். அஸ்ரப் முதலான
தலைவர்கள் முன்னெடுத்த முயற்சிகள் வீணாகக்கூடாது.
இலங்கையில் முஸ்லிம் பாடசாலைகளின் வரலாறுகள் எழுத்து வடிவில்
வெளிவந்திருப்பது மிகவும் குறைவாகும். நாட்டில் பெரிய பாடசாலைகள் என்று
குறிப்பிடப்படும் பாடசாலைகளில் அவற்றின் வரலாறு நூலுருவாக்கம் பெறாத
நிலையில் ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் வரலாறு நூலுருவாக்கம்
பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
‘ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை வரலாறு’ நூல் 337 பக்கங்களுடன்
வெளியாகியுள்ளது. இதில் தகவல்கள் யாவும் ஆதாரபூர்வமாக மிக நுணுக்கமாக
ஆராயப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளன. எனவே நூலாசிரியர் ஓய்வுபெற்ற ஆசிரியர்
எஸ்.எல்.எம். பரீத் அவர்களைப் பாராட்டாமலிருக்க முடியாது. நாடு
முழுவதிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய
பாடசாலையின் வரலாறு என்ற இந்நூல் முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றால்
மிகையாகாது. எனவே இந்நூலை கொழும்பில் கல்வி மாநாட்டின் நிகழ்வொன்றில்
முன்மாதிரிமிக்க முயற்சி என்ற அடிப்படையில் அறிமும் செய்ய சந்தர்ப்பத்தை
ஏற்படுத்திக் கொடுப்பேன்.
ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் வரலாறு எனும் தலைப்பில்
வெளிவந்திருக்கும் இந்நூல் உடுநுவரை முஸ்லிம்களின் வரலாற்றை
வெளிக்கொணர்வதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அத்துடன் இப்பாடசாலை வரலாற்று
நூல் மத்திய மாகாண முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாக வைத்து
எழுதப்பட்டுள்ளது. இது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும். முஸ்லிம்களின்
வரலாறு தொடர்பான நூல்கள் அபூர்வமாக வெளிவரும் காலப்பகுதியில் இந்நூல் வரண்ட
பாலைவனத்தில் இருந்து வெளிவந்துள்ளது என்றால் பொருத்தமானதாக இருக்கும்.
மத்திய மாகாண முஸ்லிம்களின் கல்வி எழுச்சிக்கு பாடுபட்டு உழைத்த அறிஞர்
சித்திலெப்பை மற்றும் சேர் ராசிக் பரீத் ஆகியோரின் பணியை மத்திய மாகாண
முஸ்லிம்களின் கல்வியைப் பற்றி பேசுபவர்கள் மறக்க முடியாது. ஆனால்
இத்தலைவர்கள் மறக்கப்படுகின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.
இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி எழுச்சிக்கு அறிஞர் சித்திலெப்பைக்குப்
பின்பு சேர் ராசிக் பரீத் பெரும் பணியாற்றியுள்ளார். இப்பாடசாலைக்கும் சேர்
ராசிக் பரீத் வந்து பாடசாலையின் நிலையை கண்டறிந்துள்ளார். அன்றைய
காலகட்டத்தில் சேர் ராசிக் பரீத் வயல்வெளிகள் ஊடாக முஸ்லிம்
குக்கிரமாங்களுக்கு சென்று பெண் பிள்ளைகளின் கல்வியை வலியுறுத்தினார்.
இதனால் முஸ்லிம் பெண்கள் கல்வியில் நாட்டம் காட்டத் தொடங்கினர்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை முஸ்லிம்கள் அறியாத நிலை காணப்படுகின்றமை
மிகவும் துரதிஸ்டவசமானதாகும். எமது வரலாற்றை எமது சந்ததியினருக்கு
நினைவுபடுத்த வேண்டியுள்ளது. இலங்கையின் கல்வி வரலாற்றில் முஸ்லிம்களின்
கல்விப்பணி கண்டியில் இருந்து அறிஞர் சித்திலெப்பையினால் ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது. கண்டியில் அறிஞர் சித்திலெப்பையின் சகோதரி
முத்துநாச்சியார் பாடசாலையொன்றை நடாத்தி வந்துள்ளார். எனவே முதல் முஸ்லிம்
ஆசிரியையாக முத்து நாச்சியார் கருதப்படுகின்றனார். இது கண்டி
முஸ்லிம்களுக்கு சிறந்த கல்விப் பாராம்பரியம் உண்டு என்பதற்குச்
சான்றாகும்.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றை நோக்கும் போது அறிஞர் சித்திலெப்பை
கம்பளையில் இருந்து குருணாகல் வரை முஸ்லிம் பாடசாலை ஆரம்பித்து வைத்தார்
என்பதை அறியலாம். இதன் அடிப்படையில் தான் சாஹிரா கல்லூரிகள்
உருவாக்கப்படுவதற்கு வாயப்புக்கள் ஏற்பட்டன.
முஸ்லிம்களின் கல்வி நிலை தொடர்பாக தூரநோக்குடன் சிந்தித்து சாணக்கியமாக
செயற்பப்ட்ட முஸ்லிம் தலைவர்களில் சேர் ராசிக் பரீத் குறிப்பிடத்தக்க
ஒருவராவார். அவர் முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று கல்வியின் அவசியத்தை
மக்களுக்கு எடுத்துக் கூறி பள்ளிவாசல்களில் பாடசாலைகளைத் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் சில காலம் சென்று அரச சட்டவாக்க சபையில் முஸ்லிம் பாடசாலைகளை
பள்ளிவாசல்களில் தொடரந்து நடாத்திச் செல்ல முடியாது. அதனை முஸ்லிம்கள்
விரும்புகின்றனர் இல்லை என்று குறிப்பிட்டு தனியாக முஸ்லிம் பாடசாலைகளை
அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வெற்றி கண்டார். இதன் மூலம்
முஸ்லிம் பாடசாலைகள் தனியாக இயங்கும் வாய்ப்பை சேர் ராசிக் பரீத்
ஏற்படுத்திக் கொடுத்தார்.
ஆரம்ப கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் கல்விக்கான தடைகளாக பழைமை
வாய்ந்த சம்பிரதாயங்கள் காணப்பட்டன. இத்தடைகளை உடைத்தெறிய வேண்டும்
என்பதில் எமது முன்னைய தலைவர்கள் அக்கறை காட்டினர்.
கம்பளை சாஹிரா கல்லூரியை கட்டியெழுப்ப கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்
முழுமூச்சாகப் பாடுபட்டார். இக்கல்லூரியை கம்பளை முஸ்லிம்களுக்குரியது
மட்டுமல்ல முழு முஸ்லிம் சமூகத்தினுடைய சொத்ததாக மாற்றியமைத்தார். ஆனால்
அவர் தனது இறுதிக்காலத்தில் கம்பளையில் பெரிதும் மனம் நொந்தவராக
காணப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட மனக்குமுறலால் வெளிவந்த
வார்த்தைகளை இங்கு குறிப்பிட முடியாது. முஸ்லிம் சமூகத்தில் சமூகத்தின்
வரலாறுகளை எழுதக்கூடியவர்களாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். முஸ்லிம்
ஆசிரியர்கள் தொடர்பாக விமர்சனம் இருந்த வருகின்ற போதிலும் ஆசிரியர்களால்
தான் வரலாற்றை கொண்டு வர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கலநிதி பதியுத்தீன் மஹ்மூத் கற்றவராக இருந்தமையால் தான் அரச
நிதியுதவிகளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்க அவரால் முடிந்தது.
அரச கஜானா முஸ்லிம் பாடசாலைகளை கட்டியெழுப்பப் பயன்படுத்தப்படவில்லை என்பதை
அவர் அறிந்து கொண்டார். இதன் பயனாக நாடெங்கும் சாஹிராக்கள் தோற்றம் பெற்றன
என்றார்.
-மொஹமட் றம்ஸீன்-
DC

0 Comments