இர்ஷாத் றஹ்மத்துல்லா
கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி வரவுள்ள குப்பைகளினால் ஏற்படும் அசெகரியங்கள் மற்றும் சுற்றாடல் மாசுறுவது தொடர்பிலும்,புத்தளம் சமூகத்தின் கடுமையான அதிருப்தியினை ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சருக்கு தெரிவிக்குமாறு கோறும் வகையில் இடம் பெற்ற கூட்டமொன்று இடம் பெற்றது.
புத்தளம் சைலண்ட் வொலன்டியர் அமைப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனை அவரது புத்தளம் திலைலையடி இல்லத்தில் சந்தித்து நடத்திய கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதம அமைப்பாளர் அப்துர் ரஹீம் அலி சப்ரி,சமூக ஆர்வலர் எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸி ஆகியோரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
,இதன் போது அமைப்பின் தலைவர் ஹிஷாம் மரைக்கார் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் மகஜரொன்றினை கையிப்பதையும் காணலாம்.
0 Comments