சுவாதி படுகொலை சம்பவத்தையடுத்து அனைவராலும் அறியப்பட்டவராக இருக்கும் தமிழச்சி, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இவ்வளவு விடயங்களை தெரிந்து வைத்துள்ள தமிழச்சிக்கு இன்னும் முழுமையான விடங்கள் தெரியக் கூடும்.
இந்நிலையில், தமிழச்சி முறைப்படி பிரான்ஸ் பொலிஸாரிடமோ அல்லது பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியத் தூதுவராலயத்திலோ இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்திருக்க வேண்டும்.
மாறாக அவர், இவர் சமூக வலைதளங்களில் இது குறித்த கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார். இந்த விடயம் குறித்து பிரான்ஸ் பொலிஸார் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தமிழச்சியின் பின்னணியில் இயங்கும் அனைவரும் விசாரணை வலயத்தில் இருப்பதாக பிரான்ஸில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழகத்துக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், தமிழக பொலிஸாரை சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்துள்ள தமிழச்சி நாடுகடத்தப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
0 Comments