Subscribe Us

தயாசிறி ஜயசேகர மோசடி ; அதிரடி கருத்து வெளியிட்ட நலின் பண்டார!!


விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மக்கள் வரப்பிரசாதத்தை மீண்டும் பெற்று கொள்ளும் நோக்கில் மோசடியாளர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

மோசடியாளர்களுக்கு எதிராக தண்டனை வழங்கும் செயற்பாடு உரிய வகையில் மேற்கொள்ளப்படாவிடின் தாம் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்ததாகவும் நலின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகர 2013 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் ஒன்றுக்காக ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கினார்.

அந்த காலக்கட்டத்தில் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் ஏராளமான மோசடியாளர்களை கொண்டிருந்தது.

ஆனால் தற்போது அவர் மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறார்.

இது ஒரு நகைப்புக்குரிய விடயம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments