கற்பிடிய பிரதேச சபைக்குற்பட்ட புழுதிவயல் கிராமத்திலிருக்கும் மத்திய மருந்தகத்தை சகல வசதிகளுடன் கூடிய வைத்திய சாலையாக தரமுயர் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
விருதோடை ரெட்பானா பாலசோலை கரம்பை தேத்தாபளை புளுதிவயல் கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நேயாளிகள் தினமும் இந்த வைத்திய சாலையை பயன்படுத்தி வருகிமையால் இப்பிரதேச மக்களின் நண்மை கருதி மாகாண சுகாதார அமைச்சரின் அனுமதியுடன் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிமின் நிதி ஒதுக்கீட்டில் முதல் கட்டமாக வைத்திய விடுதி மற்றும் நோயாளர் விடுதி பிரசவ வாட் போன்றவற்றை அமைக்க நிதி வழங்கப்படவுள்ளது.
இதற்காக முதற்கட்ட நடவடிக்கையாக சுகாதார அமைச்சின் பொறியியளாளர் குழு 15.09.2016 வைத்திய சாலைக்கு விஜயம் செய்து திட்டமிடல் நடவக்கையை மேற்கொண்டனர்.
தகவல் : ஜசீம் புழுதிவயல்




0 Comments