Subscribe Us

header ads

மலேசியாவில் இலங்கை தூதர் மீது தாக்குதல்; 5 பேர் கைது

மலேசியாவின கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மலேசியாவில் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கோலாலம்பூர் சென்றுள்ளார். அவரது வருகைக்கு அங்குள்ள தமிழர்களும், விடுதலைப்புலி ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மலேசியாவுக்கான இலங்கை தூதர் இப்ராகிம் அன்சார் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர் தினேஷ் குணவர்தனேவை சந்திப்பதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சிலர், ராஜபக்சே எதற்காக மலேசியா வந்தார் என்பதை கூறுமாறு வலியுறுத்தினர்.

ஆனால் இதற்கு இப்ராகிம் அன்சார் பதிலளிக்க மறுத்து விட்டார். உடனே அவரை விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் காவல் நிலையத்தையும் நாடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் வாயிலாக மலேசிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில், இலங்கை தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இதனை செலாங்கர் சி.ஐ.டி. தலைவரான முகமது அட்னன் அப்துல்லா உறுதி செய்துள்ளார்.  ஆனால், 5 பேரின் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

Post a Comment

0 Comments