பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசிக் கட்டண கொடுப்பனவுக்குப் பதிலாக 50 ஆயிரம் ரூபா பணத்தை மேலதிக கொடுப்பனவாக சம்பளத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்பொழுது கையடக்கத் தொலைபேசிக் கட்டணமாக 2000 ரூபாவும் நிலையான தொலைபேசிக் கட்டணமாக 20 ஆயிரம் ரூபாவும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கொடுப்பனவு பணமாகவன்றி கட்டணமாகவே உரிய நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு கட்டணமாக செலுத்துவதற்குப் பதிலாக 50 அயிரம் ரூபா பணத்தை சம்பளத்துடன் செலுத்துமாறு பல உறுப்பினர்களிடமிருந்தும் வேண்டுகோள்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஏற்பவே, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த கொடுப்பனவை வேண்டி அமைச்சரவைப் பத்திரமும் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.