கொழும்பில் இருக்கின்ற குப்பைக்கூளங்களை ரயில் வண்டிகள் மூலம் புத்தளம் பிரதேசத்தில் கொண்டு வந்து தட்டுவதட்கான அரசாங்க செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயற்திட்டம் வெற்றியடைந்தால் புத்தளத்தில் இருக்கின்ற சமூகத்திற்கும், வரவிருக்கின்ற எதிர்கால சந்ததியினருக்கும், சூழ இருக்கின்ற இயற்கை வளங்களுக்கும் பாதிப்புகள் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும் என்பதை முன்னிறுத்தி பலர் பல சமுக மட்டங்களில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த எதிர்ப்புகளுக்கு வலுவூடுவதட்காக நாங்கள் உங்கள் மத்தியிலே 15 வினாடி உதவி ஒன்றை கேட்கிறோம். நீங்கள் புத்தளத்தை நேசிப்பவராக இருந்தால், நீங்க புத்தளத்தின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க விரும்பினால், நீங்கள் புத்தளத்தில் இருக்கும் இயற்கை வளங்களின் மேல் அக்கறை கொண்ட ஒருவராக இருந்தால் வெறும் 15 வினாடிக்குள் “நீங்கள் இந்த செயற்திட்டத்திற்கு எதிர்ப்பானவர்” வீடியோ பதிவு செய்து அதனை சமுக வலைத்தளங்கலான Facebook, Twitter, Instagram போன்றவற்றில் #CleanPuttalam என்ற Hesh Tag ஐ பாவித்து பதிவு செய்வதன் மூலம் “நீங்கள் புத்தளத்தை நேசிக்கும், புத்தளத்தின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும், இயற்கை வளங்களின் மேல் அக்கறை கொள்ளும் ஒருவர்” என்பதை உறுதிப்படுத்துங்கள்.
இன்ஷா அல்லாஹ் இப்படி செய்வதன் மூலம் இந்த செயற்திட்டத்திற்கு புத்தளம் மக்கள் எதிர்ப்பு என்பதை நாடு மாறும் உலகம் பூராகவும் தெரிவிப்பதோடு, இதனை நிறுத்த முடியுமான அதிகாரங்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த செயற்திட்டத்தை நிறுத்த அழுத்தங்களையும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
ஆகவே இன்றே உங்களுடைய 15 வினாடி வீடியோ பதிவை #CleanPuttalam என்ற hash tag சொல்லோடு சமுக வலைத்தளங்களில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.


0 Comments