Subscribe Us

கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக்



உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை 4.30 மணியளவில் தொடங்கியது.

தொடக்க விழா கால்பந்து மைதானமான மரக்கானாவில் அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைப்பெற்றது.

தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, மைதானத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரையில் ஒலிம்பிக் தீபத்தை 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வால்ண்டர் லீ லீமா ஒலிம்பிக் பதக்கத்தை ஏற்றினார். ஒலிம்பிக் தீபத்தை மூன்று முறை பிரெஞ்சு சாம்பியனான குஸ்டோவ் குரேடேன் ஏந்தி வந்தார். உடல்நலக்குறைவால் கால்பந்து முன்னாள் ஜாம்பவான் பீலே கலந்து கொள்ளாததால் இவர் ஒலிம்பிக் தீபத்தை கொண்டுவந்தார். 

விளையாட்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ள இந்த ஒலிம்பிக் திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல தயாராகி வருகிறார்கள்.40 நாடுகளின் தலைவர்கள் ஒலிம்பிக் துவக்கவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு பணியில் 85 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளார்கள்.

Post a Comment

0 Comments