Subscribe Us

வறிய மாணவர்களிற்கு வடமாகாணசபை உறுப்பின றயீஸின் பன்முக நிதியில் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு - படங்கள்-


பாறுக் ஷிஹான்


மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளிலும் வறுமைக்கோட்டில் உள்ள மாணவர்களுக்கு ஒரு தொகுதி துவிச்சக்கர வண்டிகள் மன்னார் வலய கல்விப் பணிமனையின் ஆங்கில மத்திய நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

 மேற்படி பாடசாலையில் கல்வி பயிலும்  நோக்குடன் தூர இடங்களிலிருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களிற்கு இவ்வாறு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 இந்த துவிச்சக்கர வண்டிகள் வடமாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்ஸீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான ஹபீபு முகம்மது றயீஸின்  பன்முக நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 22 க்கு மேற்பட்ட துவிசக்கர வண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் அப்துல் காதர் முஸாதிக் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்ஸீம் காங்கிரஸ்  உயர் பீட உறுப்பினர் தமீம் உட்பட வலய கல்வி பணிமனை அதிகாரிகளும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments