Subscribe Us

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியின் மைதான புனரமைப்பு - படங்கள்


பாறுக் ஷிஹான்


 மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இம்மைதானத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு இவ் வேலைகளை தொடங்கும் முகமாக பாடசாலை மைதானத்தை சூழ உள்ள காடுகளை துப்பரவு செய்யப்படுகின்றன.

இந்த துப்பரவு செய்யும் வேலைத்திட்டத்தை அப் பாடசாலையின் பழைய மாணவரும் மாகாண சபை உறுப்பினருமான ரயீஸின் ஏற்பாட்டில்  கனரக இயந்திரம் மூலம் துப்புரவு செய்யும் பணிகள் நடைபெறுகின்றது.

 இந்த நடவடிக்கையானது அண்மையில் மன்னாருக்கு வருகை தந்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  எம்.எச்எம். ஹரீஸிடம் வட மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான கபீபு முகமது றயீஸ் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில்  மன்னார் மாவட்டத்தின் பொது விளையாட்டு மைதானம் மற்றும் பாடசாலை விளையாட்டு மைதானங்கள் புனரமைப்புக்கு கணிசமான நிதிகள் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் முதற்கட்டமாகவே எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய கல்லூரியின் மைதான புனரமைப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments