இந்நிகவுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை ஆளுணர் ரெஜினேட் குரே, கெளரவ விருந்தினர்களாக: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பெண்கள் விவகாரப் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ் இந்திய இணைத்தூதரகத்தின் இணைத்தூதுவர் நடராஜான் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண சபையின் அமைச்சர்களான டெனிஸ்வரன், ஐங்கரநேசன் , உறுப்பினர்கள் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
வடமாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் அமையப்பெற்ற இத்தொழில் நிலையம் இன்னும் பல கிளைகளை வடக்கிலும் கிழக்கிலும் அமைத்து இன்னும் பல இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments