Subscribe Us

header ads

நோன்பில் கஞ்சியும் ஜெஸ்ஸியும் ஃபேஸ்புக்கை ஒரு கலக்கு கலக்கியது போல ரெண்டு வருடங்களுக்கு முன்பு வந்த கறுப்பு கலர்


இந்த நோன்பில் கஞ்சியும் ஜெஸ்ஸியும் ஃபேஸ்புக்கை ஒரு கலக்கு கலக்கியது போல ரெண்டு வருடங்களுக்கு முன்பு வந்த இதே போன்ற ஒரு புனித மாதத்திலும் ஒரு மேட்டர் வைரலாகப் பரவியது..

தன்னை காக்க ஒரு தேவ தூதன் வருவானா என்று சமுதாயம் சிந்தித்த நேரம் அது..நாட்டில் இனவாத மழை பொழிந்து கொண்டிருக்க பக்திப் பிராவகத்தின் உச்சத்தில் இருந்தது ஃபேஸ்புக் சமூகம்.

திடீரென்று ஃபேஸ்புக் எல்லாம் கறுப்பாக மாறின..ப்ரொபைல் பிக்சரகள், கவர் போட்டோக்கள் எல்லாம் அரபு பேசின..எங்கும் கறுப்பு..எதிலும் கறுப்பு..கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...என்று பாடாதது மட்டும் தான் குறை..

" அவங்க வந்திட்டாங்களாம் " குர் ஆனில் சொல்லப்பட்ட கூட்டம் அவங்களாம்.

சொல்லப்பட்ட மாதிரியே இராக்கில், சிரியாவில் எல்லா இடங்களையும் கைப்பற்றிக் கொண்டு வருகிறதாம்.அவங்க ஒரு மேப் வெளியிட்டிருக்காம்..அதில் ஒரு நாள் இந்தியா, ஸ்ரீலங்கா எல்லாம் இஸ்லாமிய ஆட்சியின் பங்குதாரர் ஆகுவாங்களாம்..


இவைதான் அந்நாட்களில் ஹொட் நியூஸ்...இஸ்லாமிய அரசு என்ற பேரில் உருவான அந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தை நம்மில் சிலர் வெற்றிலை, பாக்குவைத்து வரவேற்றது தான் அப்பாவித்தனத்தின் உச்சம்

கறுப்புக் கலரு மாமாக்களின் அதிரடிகள் பலரை கடும் சந்தோசத்தில் ஆழ்த்தின..ஆனால் எங்கோ ஒரு நாட்டின் மூலையில் இருக்கும் ஒரு தீவிரவாதி டாய்லட் போனாலும் டெலஸ்கோப் , ரேடார் வைத்து தேடும் அமெரிக்கா FBI, CIA, இஸ்ரேலின் மொசாட் என்பன கள்ள மெளனம் காத்தன..இது ஆயிரம் அர்த்தங்களை உணர்த்தியது.

இந்த ரெண்டு வருடங்களில் ஏகப்பட்ட வன்முறைகள், குண்டு வெடிப்பு நிகழ்வுகள்.உச்சபட்ச அதிர்ச்சியாக நேற்று புனித மதீனா நகர் உட்பட 24 மணித்தியாலங்களில் மூன்று குண்டு வெடிப்புக்கள்..கருங்குஞ்சிகளின் அவலட்சணங்களின் அணிவகுப்பு இது.

இந்நிலையில் இந்த நரமாமிச பிரியர்களுக்கு வக்கலாத்து வாங்கவும் ஒரு கூட்டம் இன்னும் இந்த சமூகவலை தளங்களில் இருப்பதுதான் கேவலமான வேதனை.இவர்களால் இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

1980 களில் வறுமையும் ,பசியுமே தீவிரவாத நெட்வேர்க்குகளுடன் அக்கால தலைமுறை இணைந்து கொள்ள காரணமாகின..ஆனால் இது ஆன்லைன் யுகம்.குறிப்பாய் டீன் ஏஜ் தலைமுறையின் பெற்றோர் விழிப்புணர்வுடன் இருத்தல் நல்லது.ஏனெனில் தற்போது வாட்ஸ்அப் உம் ஃபேஸ்புக்குமே கறுப்பு மாமாக்களின் பிரச்சார பீரங்கிகளாய் இருக்கின்றன...

-Zafar Ahmed

Post a Comment

0 Comments