ஏறாவூரைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவரும் இளைப்பாறிய ஆசிரியர் நூஹு லெவ்வை அவர்களின் புதல்வரும் ஏறாவூரின் பிரபல தொழில் அதிபர் மீராலெவ்வை (நாவலடி ) ஹாஜியாரின் பேரருமான எனது அன்புக்கும் பாசத்துக்குமுரிய நண்பர் " சிராஜ் நூஹு லெவ்வை " அவர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் -அதியுயர் துறையான "CCIE" ( Cisco Certified Internetwork Expert) என்ற துறையில் , பெல்ஜியத்தில் நடைபெற்ற பரீட்சையில் தோற்றி தன்னுடைய இளம் வயதில் அளப்பெரும் சாதனை படைத்து எமது தாயகத்துக்கும் பிறந்த மண் ஏறாவூருக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் என்பதை நினைக்கும் போது "தாய் மண்ணைச் சேர்ந்தவர்கள் நாம்" என்ற அடிப்படையில் எமது உச்சி குளிர்கின்றது; உள்ளம் மலர்கின்றது.
இது 8 மணித்தியாலங்கள் கொண்ட நீண்ட நேர பரீட்சையாகும். இந்த துறை PhD துறைக்கு நிகரானது.
இது ஒரு சாதாரண சாதனை அல்ல. பல வருடங்களையும் பல கோடிப் பணம்களையும் செலவழித்து அர்ப்பணிப்புடன் செயட்பட்டால் மாத்திரமே இந்த உயர் நிலையை அடைய முடியும். அல்ஹம்துலில்லாஹ் .
நண்பர் சிராஜ் இன்று அந்த இலக்கை அடைந்துள்ளார்.
சிராஜின் இந்தக் கனவு அவர் தாயகத்தில் சிறுவயதினராக இருக்கும்போதே அவரைச் சூழ்ந்து கொண்டதாகும். இதனால், இந்தத் துறையைக் கற்றுக் கொள்ள குடும்பத்துடன் இங்கிலாந்து வந்தார்.
மில்டன் கீன்சிலுள்ள "winNET System (Director Harith Kariapper)
இவரின் கனவுக்கு உயிர் கொடுத்தது. இப்போது "CCIE" துறையில் உலகில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களின் பட்டியலில் எமது ஏறாவூர் மகன் இடம்பிடித்துள்ளார் . மாஷா அல்லாஹ்
தற்போது இங்கிலாந்தின் தொழில் அதிபரான சிராஜ் தனது கும்பத்தையும் வர்த்தகத்தையும் கவனித்துக் கொண்டு பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் தொழில் நுட்பத் துறையிலும் இமாலய சாதனை படைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.
இவர், இளைப்பாறிய ஆசிரியர் பாவா, ஆசிரியை சக்கினா தம்பதிகளின் (Son in law) மருமகனும், கனடாவில் வாழும் Dr.அமீர்தீனின் மூத்த சகோதரனின் மகனும் , தொழில் அதிபர்களான ஹுசைன் , சம்சுதீன் , மௌலவி ஹசன் , தாஸிம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.
இவரின் சாதனையை வாழ்த்தி வரவேற்போமாக !


0 Comments