Subscribe Us

இந்தி நடிகர் மாதிரி ’ஷேவிங்’செய்யுங்கள், இல்லையெனில் தற்கொலை செய்வேன் கணவனுக்கு மனைவி மிரட்டல்

தாடியை ’ஷேவிங்’ செய்யுங்கள் இல்லையெனில் நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மனைவி மிரட்டியதால் கணவர் ஒருவர் கோர்ட்டை நாடிஉள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 36-வயதுடைய அர்ஷாத் பத்ருதீன் என்பவர் அங்குள்ள மசூதியில் மதகுருவாக உள்ளார். அர்ஷாத் பத்ருதீன், தாடியை ’ஷேவிங்’ செய்யுங்கள் இல்லையெனில் நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று எனது மனைவி மிரட்டி வருகிறார் என்று மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் புகார் கொடுத்து உள்ளார். என்னுடைய மனைவி என்னுடைய எதிர்ப்பையும் மீறி மொபைல் போனில் பிற ஆண்களுடன் அரட்டை அடித்து வருகிறார். என்னுடைய மனைவிக்கு கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அவர் எதேனும் விபரீத முடிவு எடுத்தால் என் மீது குற்றம் சாட்டப்படும் என்று அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். 

மாவட்ட மாஜிஸ்திரேட் பங்கஜ் யாதவிடம் கொடுத்து உள்ள புகாரில் அர்ஷாத் பத்ருதீன், “நான் இங்குள்ள மசூதி ஒன்றில் மதகுருவாக உள்ளேன், இஸ்லாத்தை உண்மையாக பின்பற்றி வருபவன். நான் காபூர் மாவட்டம் பில்கவுவாவை சேர்ந்த ஷகானாவை கடந்த 2001 திருமணம் செய்துக் கொண்டேன். திருமணம் ஆன பின்னர் என்னுடைய மனைவி நான் ஷேவிங் செய்யவேண்டும் என்று வற்புறுத்தினார், இந்தி நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருகான் போன்று தாடி வைத்திருக்க கூடாது என்று கூறினார். இரவும் பகலும் போனை வைத்துக் கொண்டு அரட்டை அடித்து வருகிறார். நானும் பலமுறை எடுத்துக் கூறிவிட்டேன், ஆனால் அவர் கேட்பதாக தெரியவில்லை. 

எங்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளது, இப்போதும் அவருடைய வலியுறுத்தல் தொடர்கிறது. என்னுடைய குழந்தைகளும் அவருடைய கெட்ட நடவடிக்கைகள் பிடித்துக் கொள்வார்கள் என்று அச்சம் உள்ளது, பிறகு அவர்களை ஒழுக்கமாக்குவதில் பிரச்சனையாகும்.சமீபத்தில் நான் திட்டியபோது அழுதார், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு நானும் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டினார்,” என்று கூறிஉள்ளார். ரமலானின் போது குழந்தைகளுக்கு மேற்கத்திய ஆடைகளை எடுக்க முயற்சித்தார் அப்போதும் பிரச்சனை ஏற்பட்டது. 

தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டினார், ரமலான் முடிந்த மறுநாள் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அவரை உயிருடன் மீட்டோம். அவரிடம் ஏன் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கிறாய் என்று கேட்டபோது அமைதியாக இருந்தார், எங்களிடம் பேசுவதும் கிடையாது என்றும் குறிப்பிட்டு உள்ளார். மாவட்ட மாஜிஸ்திரேட் இந்த புகார் தொடர்பான நகலை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கும் அனுப்பிஉள்ளார். இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார். 

Post a Comment

0 Comments