Subscribe Us

17 வயதுடைய 3 பாடசாலை மாணவர்கள் கைது!

FILE PICTURE

காலி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கஞ்சா போதைப் பொருளை பயன்படுத்திய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பாடசாலையின் பின்னால் சென்று இவ்வாறு கஞ்சா போதைப்  பொருளை பயன்படுத்தியுள்ள நிலையில் காவற்துறை அவர்களை சுற்றிவளைத்துள்ளனர்.

ஒரு மாணவர் பாடசாலை சீருடையுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப் பரிசில் சித்தியடைந்து, குறித்த பாடசாலைக்கு வந்துள்ள மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

17 வயதுடைய மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments