Subscribe Us

கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களின் அமைப்பான KDSQ அமைப்பின் “Feed a Needy Neighbor” 2016

கற்பிட்டி பிரதேசத்தில் மண்டலக்குடா, தில்லையூர் மற்றும் தேத்தாவாடி ஆகியன மிகவும் பின்தங்கிய பிரதேசமாகும். இப்பகுதிகளில் 400 க்கும் அதிகமான குடுபங்கள் வாழ்ந்து வருகின்றன. பெரும்பான்மையனா மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் குடிசைகளில் வாழும் இம்மக்கள் குடிநீர் வசதி, மின்சாரம் வசதி சரியான முறையில் கிடைக்காமல் கஷ்டப்படுகிறனர். மழை காலங்களில் இவர்களது குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றன.

இப் பக்தியில் வாழும் பல குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் கடந்த வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் !

Kalpitiya Development Society - Qatar (KDSQ) (கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களின் அமைப்பான KDSQ) கடந்த மூன்று வருடங்களாக ரமழான் மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளும் “ரமழான் உலர் உணவு அன்பளிப்பு திட்டம்” இவருடம் “Feed a Needy Neighbor” என்ற சுலோகத்தின் கீழ் இவ்வேலைத் திட்டத்தை செயற்படுத்தி, வெற்றிகரமாக பல குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் KDSQ ( Kalpitiya Development Society - Qatar)  அமைப்பின் கற்பிட்டியின் இணைப்பாளர் தலைமையில் விநியோகிக்கப்ட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

KDSQ ( Kalpitiya Development Society Qatar)  அமைப்பு மேற்கொண்ட இவ்வுதவி ரமழான் தினங்களில் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்த அவர்கள் கட்டாரில் வாழும் கற்பிட்டி சகோதரர்களுக்காக பிரார்தித்ததுடன் தமக்கு தேவையான ஏனைய அடிப்படை வசதிகளையும் முடிந்த அளவு செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.
 இது பற்றி KV க்கு: KDSQ தலைவர் மிஷ்காத்; தமது அமைப்பின் உறுப்பினர்களுக்கு நன்றி தெறிவித்ததுடன், புதிய அங்கத்தவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பை விடுத்ததுடன், இவ் அமைப்பை மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் ( குவைத், சவுதி, துபாய், ஓமான்) போன்ற நாடுகளில் வாழும் கற்பிட்டி வழ் சகோதரர்ககளை கொண்டு விரிவுபடுத்தஉள்ளதாக தெறிவித்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் ( குவைத், சவுதி, துபாய், ஓமான்) வாழும் கற்பிட்டி வழ் சகோதரர்கள் நண்பர்கள் KDSQ உடன்தொடர்புகொள்ள விரும்பினால்.
M. Miskath: +974 7068 8485
Kalpitiya
M. Maheen : +94 71 667 2442












Post a Comment

0 Comments