Subscribe Us

குழந்தை வளர்ப்பு ஓர் சமூகவியல் பார்வை


தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்ற பழமொழி எல்லாம் மழை ஏறிப் போய் விட்டது பிள்ளைகளின் முதல் பள்ளிக் கூடம் பெற்றோர் தான் குழந்தைகள் முதல் சமூகமயமாக்கப்படுவது (socialize ) பண்ணப்படுவதும் அனைத்தையும் கற்றுக் கொள்வது தம் பெற்றோரிடமும் குடும்பத்தினரிடமிருந்துமாகும் எல்லாப் பெற்றாரும் தம் பிள்ளைகளுக்கு சிறந்தவற்றை தான் கற்றுக் கொடுக்கின்றனர் ஆனால் பிள்ளைகள் பாடசாலை சென்றவுடன் வீட்டில் உபயோகிக்காத சில சொற்களையும் செயல்களையும் செய்கின்றனர் இதற்கு காரணம் அவர்கள் பாடசாலைகளில் ஒத்த வயதுக்குழு peer group மூலம் சமூகமயமாக்கப்படுவதோடு அவர்களை சேர்ந்து நடக்க முற்படுவதன் விளைவே ஆகும் அவர்கள் சேர்ந்து நடக்கும் நண்பர்களை போன்று நடை உடை பாவனை அனைத்தையும் மாற்றிக் கொள்வர் இதனால் பிழையான சமூகமயமாக்கம் socialization  ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு பட்ட குடும்ப பின்னணி சூழலில் இருந்து வந்திருப்பர் பெற்றாரான உங்கள் கவனம் எப்பொழும் உங்கள் பிள்ளை இணைந்து நடக்கும் நண்பர்கள் யார் யார் என்பதை அறிந்து வைத்திருக்க வேன்டும் அத்தோடு பிள்ளையின் நடத்தை குறித்து எப்போதும் அவதானத்துடன் இருக்க வேன்டும் ஏனெனில் பிள்ளைகள் குற்றம் செய்தால் அவர்கள் வார்க்கப்பட்ட வித்த்தை பார்க்க மாட்டார்கள் மாறாக வளர்க்கப்பட்ட வித்த்தையே பார்ப்பர்.

பிள்ளைகளின் வளர்ச்சிப் பருவங்களிடையே அவர்களிடத்து பல்வேறு உடலியல் உளவியல் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே காணப்படும் அதிலும் குறிப்பாக பதின்ம பருவத்தினரிடையே teenagers இடையே இம் மாற்றங்கள் அதிகம் காணப்படும்  அவை இயற்கையான மாற்றங்களாக காணப்படினும் இப்பருவமானது  கத்தியில் நடந்திடும் பருவம் என குறிப்பிடலாம் ஏனெனில் கத்தியால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் அதே போல் வாழ்க்கையில் பல திருப்பு முனைகள் இப்பருவத்திலேயே நிகழ்கின்றது இப்பருவத்தில் பெற்றார் சிறப்பாக வழிகாட்டுவர்களாக இருந்தால் அவர்களது வாழ்வு ஒளிமயமானதாக மாறும் இல்லையெனில் ஒத்த வயதுக் குழுக்களின் தவறான சமூகமயமாக்கத்து உட்படுவர் இதனால் இப்பருவத்தில் உங்கள். குழந்தைகள். மீது கூடிய கரிசனை எடுங்கள் அவர்கள். இக்கால கட்டத்தில் அதிகம் ஒத்த வயது தம் சகபாடிகளுடன் இணைந்து நடப்பதையே விரும்புவர் அதனால் அதிகம் அதிகம் அவர்களது நண்பர்கள் குறித்து அறிந்து வைத்திருப்பதோடு பிள்ளைகளின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை அதிகம். அதிகம் வெளிக்காட்டுங்கள் அப்போது அவர்களுக்கு குடும்பத்துடன் பிணைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது பிள்ளைகளின் ஒவ்வொரு நடத்தைகள் குறித்தும் மிகவும் அவதானமாக இருங்கள் ஏனெனில் தன் தலையிலேயே தானே மண்ணை வாரி போடும் பருவம் இது தான் செய்வது சரியா தவறா என அறியாது தனக்கு தானே கேடு இழைத்துக் கொள்ள சில நேரம் நேரிடும் நம் பிள்ளை தவறு செய்யாது என கண்மூடித்தனமாக நம்பிக்கை கொண்டு அவர்களது விடயத்தில் பொடுபோக்காக இருந்து விடாதீர்கள் ஏனெனில் தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்பதை போல பிள்ளை இணைந்து நடக்கும் நண்பர்கள் சென்று வரும் சூழலுக்கு ஏற்றாற்  போல அவர்களது மனோநிலை மாறும் எனவே தான் இப்பருவத்தில் அதி கூடிய கவனத்தை பிள்ளைகள் மீது செலுத்த வேன்டியுள்ளது இப்பருவத்தில் தான் செய்வது மட்டும் தான் சரி என நினைப்பர் இப்பருவம் தான்டிய பின் தான் வாழ்வின் யதார்த்தங்கள் புரிந்து சரியான பாதையில் நடக்க முற்படுவர் எனவே இப்பருவத்தில் பெற்றார் பிள்ளைகளை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க வேண்டும் ஏனெனில் குழந்தைகள் பெற்றாருக்கு தரப்பட்டுள்ள அமானிதங்கள் அவை குறித்து அல்லாஹ்வின் விசரனையில் இருந்து நீர் தப்பவே முடியாது எனவே பிள்ளைகள் யாருடன் சேர்கின்றனர் என்பது குறித்தும்  பதின்ம பருவத்தில் அவர்களது செயற்பாடுகள். குறித்தும் அக்கறையுடன் செயற்படுங்கள் இன்றைய உங்களது சிறப்பான வளர்ப்பில் தான் ஒருவருக்கு சிறந்த மனைவி /கணவன் கிடைப்பதில் தாக்கம் செலுத்துகிறது உங்கள் வளர்ப்பு சிறப்பாக இருந்தால் அதன் மூலம் பயன் பெறுபவர்கள் அனைவரும் நிச்சயம் உமக்கு பிரார்த்தனை புரிவர் இம்மை மறுமை இரண்டிற்கும் பயன் தரும் குழந்தைகளாக உங்கள் குழந்தைகளை வளர்த்தெடுங்கள் சிந்திப்போம் செயற்படுவோம்

Written by
Sahana salman
B.A in sociology

Post a Comment

0 Comments