Subscribe Us

ஒரே நாளில் இரு வேறு இறுதி சுற்றுத்தொடர்கள்.பிரதம அதிதியாக கே.ஏ.பாயிஸ்


புத்தளம் ப்ரீமியர் லீக் கிண்ணத்துக்கான உதைப்பந்தட்ட மற்றும் கிரிகட் இறுதி சுற்றுப்போட்டிகள் (03.06.2016) புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்றது.
இதில் கிரிகட் இறுதி சுற்றுப்போட்டியில் புத்தளம் ட்ரகன்ஸ் கிரிகட் அணியும், உதைப்பந்தாட்ட இறுதித்தொடரில் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் புத்தளம் லிவர்பூல் உதைப்பந்தட்ட கழகமும் வெற்றி வாகை சூடியது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் பாரளுமன்ற உறுப்பினரும் கால்நடை வள பிரதி அமைச்சரும் மற்றும் முன்னால் நகரசபை தலைவருமான அல்ஹாஜ் கே.ஏ.பாயிஸ் அவர்கள் கலந்துக்கொண்டு கலந்துக்கொண்ட அணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கிண்னங்களையும் வழங்கி வைத்தார்.
இப்போட்டி தொடரானது இதற்கு முன்பு நடந்த போட்டி தொடர்களை விட வித்தியாசமானதாகவும் பார்வையாளர்களின் வரவேற்ப்பை பெற்றதாகவும் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹமீட் உஸாமா(பர்ஜீஸ்)

Post a Comment

0 Comments