Subscribe Us

உலகிலேயே விலை உயர்ந்த விமான டிக்கெட்டை எதிகாட் ஏயர்லைன்ஸ் அறிமுகம் - படங்கள்,வீடியோ

உலகிலேயே விலை உயர்ந்த விமான டிக்கெட்டை எதிகாட் ஏயர்லைன்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 93 இலட்சத்து 13 ஆயிரத்து 791 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
லண்டனில் இருந்து மெல்போர்ன் சென்று வர இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுக்கு தி ரெஸிடென்ஸ் (The Residence )என பெயரிடப்பட்டுள்ளது. 
ஏர்பஸ் A380 ரக விமானத்தில் 3 அதிசொகுசு அறைகளுடன் 5 நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது. 
125 சதுரஅடி அளவில் தனி மற்றும் இரட்டை படுக்கையறை வசதியுடன் அறைகள் ஒதுக்கப்படுகின்றன. 
குறித்த விமானத்தில் விலை உயர்ந்த உணவுகளை சமைப்பதற்காக சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்ட சமையல் கலைஞரும் பயணிப்பர்.
இதுதவிர, குறித்த விலையுயர்ந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் விருந்தினரை உற்சாகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. 
அதில், அதிநவீன குளியலறை, 32 அகல எல்.சி.டி. டிவி, இரண்டாக மடிக்கும் வகையிலான சாப்பாட்டு மேசை, தோலினால் உருவாக்கப்பட்ட இரட்டை இருக்கை ஆகியவையும் சொகுசு அறைகளில் இடம்பெறுகின்றன.






Post a Comment

0 Comments