Subscribe Us

இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் மாத நோன்பை இன்று ஆரம்பித்தனர்..


புனித ரமழான் மாத்திற்கான தலை பிறை நேற்று காணப்பட்டுள்ளதுடன் இன்று முதல் இலங்கை வாழ்  முஸ்லிம்கள் புனித ரமழான் மாத நோன்பை ஆரம்பித்துள்ளார்கள்.

உலகில் பல மில்லியன் முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை ஆரம்பித்துள்ளனர்.

அதிகாலை தொடக்கம் சூரியன் மறையும் வரை எவ்வித உணவுகளும் இன்றி  இருப்பதனையே நோன்பு என்ற பதம் சுட்டிக்காட்டுகின்றது.

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை மத்திய கிழக்கு, ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்பட்ட நிலையில் ரமழான் மாத நோன்பு ஆரம்பித்ததுடன்,  உலகில் அதிகமான முஸ்லிம்கள் வாழும் ஒரு நாடு என்ற வகையில் இந்தோநேசியாவில் நேற்று முதல் ரமழான் மாத நோன்பு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்புனித ரமழானில் அதிக நன்மைகளை செய்து பயனடையுமாறு தாழ்மைவுடன் தெரிவித்து கொள்கிறோம்.

Post a Comment

0 Comments