Subscribe Us

இஸ்லாத்தில் ஓர் சிறந்த கணவன்



திருமணத்திற்க்கு பின் 18 வருடம் கழித்து அப்போது தான் முதன் முதலில் மனைவியின் மிக கொடுமையான சமையல் ஒன்றை கணவன் எதிர்நோக்குகிறான். வேகவைக்கப்படாத காய்கறிகள், கருகிப்போன இறைச்சித்துண்டு என எதிலும் ஒழுங்கற்ற தன்மையை கணவன் காண்கிறான். மிகப்பொறுமையாக குறை ஏதும் கூறாமல் அந்த உணவை உண்கிறான்.

உணவுண்டு முடித்தபின் தனது மனைவியை அழைத்து புன்னகைத்தவாறு நெற்றியில் முத்தமிடுகிறான் கணவன். 

" ஏன் முத்தம்? " என்கிறாள்.

"உன்னுடைய இன்றைய சமையல் உனது முதல் நாள் சமையலை நினைவூட்டுகிறது. அது கடந்த காலத்தில் நீ மணப்பெண்ணாய் நின்ற காலத்தை எனக்கு நினைவூட்டுகிறது ; ஆகவே இன்றைய நாள் உன்னை அத்தகைய நாளைப்போன்ற ஒரு தருணத்தை உனக்கு உண்டாக்கபோகிறேன் " என்று மனைவியை சந்தோப்படுத்துகிறான் கணவன். 

ஓர் சிறந்த கணவன் தனது மனைவியின் குறைகளை மறைத்து நிறைகளை கொண்டு வாழ்வினை முழுமையாக்குகிறான். ஓர் சிறந்த இஸ்லாமிய கணவன் என்பவன் தன்னுடைய மனைவியிடம் அழகிய முறையில் நடந்துக்கொள்பவனும், தனது மனைவியை தனக்கு கிடைத்த சிறந்த பரிசாக எண்ணுபவன் தான் . 

செய்யதினா அபுஹுரைரா ரழியல்லாஹு அன்ஹூ அவர்களின் நபிமொழி ஒன்று இப்பதிவுக்கு மேலும் மெருகூட்டும்

"மிகசிறந்த இறைநம்பிக்கையாளர் என்போர் தனது உயர்குணத்தால் சிறந்தவராகவும் தனது மனைவியிடத்தில் மிக சிறந்தவராகவும் அடையாளம் காணப்படுவோரே ".

- Dust of Madeena எனும் தளத்திலிருந்து சகோதரர் Mohamed Riyas அவர்களால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது -

Post a Comment

0 Comments