இது தவ்ஹீத் ஜமாஅத்துக்களுக்கு எதிரான பதிவல்ல. எனது ஆரம்பப் பாசறையே தவ்ஹீத் தான். அங்கு தான் வளர்ந்தேன், அறிவூட்டப்பட்டேன். இன்றளவும் தென்னிலங்கை தவ்ஹீத் உலமாக்கள் மேல் எனக்கு ஆழ்ந்த அன்பும் மரியாதையும் உண்டு.
தவ்ஹீத் அமைப்பில் முழுமையாக ஈடுபடும் போது அடுத்தவர் பிழைகளைத் துருவித் துருவி ஆராய்வதில் எனக்கேட்பட்ட ஆர்வம் எனது பிழைகளைத் திருத்திக் கொள்வதில் ஏற்படவில்லை என்பதால் நான் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் பற்றியும், அதன் அறிசர்கள் பற்றியும் படிக்க ஆரம்பித்தேன். அந்த அமைப்புக்களின் வௌியீடுகளையும் தொடர்ந்து வாசித்தேன். அந்த அமைப்பின் கிளை நிறுவனங்களோடு ஓரளவு தொடர்புகளை உருவாக்கிக் கொண்டேன். எல்லா அமைப்புக்களிலும் ஸலப் சிந்தனைப் போக்குதான் உள்ளது. தஹ்வா வழிமுறைகள் மற்றும் சில சிந்தனைப் பிரிவுகளில் வேறுபாடுகள் உள்ளன. அவை காபிர், வழிகேடு பட்டம் சுமத்தும் அளவுக்கு பாரதூரமான வேறுபாடுகள் அல்ல என்பதையும் புரிந்து கொண்டேன். போகப் போக, கல்வித் துறையில் எமது சமூகம் நல்ல அடைவுகளை அடைய வேண்டும் என்று என் மனதில் தோன்றிய எண்ணம் காரணமாக மாணவர்களின் கல்வி, ஆன்மீக, மற்றும் ஆளுமை விருத்திக்காக மிகச் சிறந்த செயற்றிட்டங்களை வடிவமைத்து செயற்படுத்தும் ஜமாஅதே இஸ்லாமியின் மாணவர் அமைப்பான ஜம்இய்யதுத் தலபாவின் ஆதரவாளனாக மாறினேன். ஆனால் அதன் அங்கத்துவம் பெறவில்லை.
தவ்ஹீத் சகோதரர்களிடம் நான் கண்ட மிகப் பிழையான ஒரு போக்குதான், தான் சாராத அமைப்புக்களின் நற்பணிகளையோ, அந்த அமைப்புக்களின் அறிசர்களையோ வரவேற்க மாட்டார்கள். அந்த நற்பணிகள் எவ்வளவு வினைத்திறனானவையாக இருந்தாலும், அந்த அறிசர்கள் எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் சரியே. தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்த சாதாரண ஒரு பொடிச் சிறுவனும் அந்த அறிசர்களை எள்ளி நகையாடும் அளவுக்ேக பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். இதுகால வரை நான் முகநூலிலோ, தவ்ஹீத் சார்ந்த வௌியீடுகளிலோ மௌலானா மௌதூதி, இமாம் ஹஸனுல் பன்னா தொடக்கம் சமகால இஸ்லாமிய அறிசர்களான கலாநிதி செய்க கர்ளாவி ....... போன்ற எவரையும் சிலாகித்துப் பேசியதையோ, அவர்களுடைய இஸ்லாத்துக்கான அறிவியல் மற்றும் ஆன்மீக பங்களிப்புக்கள் பற்றியோ பேசியதைக் காணவில்லை. உள்ளூர் இஸ்லாமிய அறிசர்களான உஸ்தாத் மன்ஸூர், உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர், உஸ்தாத் அகார் போன்றவர்களையும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கழுவி ஊற்றுவதைத் தான் காண முடிகிறதே தவிர, அவர்களுடைய எந்தவொரு நல்ல விடயங்களும் சுட்டிக் காட்டப்படுவதில்லை. பழைய "உண்மை உதயம்" இதழ்களில் மௌலானா மௌதூதி (ரஹ்) வுடைய கருத்துக்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் இப்போதைய உண்மை உதயம் இதழ்களில் காண முடியவில்லை. உண்மை உதயம் ஆசிரியரான எனது பெருமதிப்புக்குறிய அஷ்ஷெய்க் இஸ்மாயீல் (ஸலபி) அவர்கள் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களோடு நல்ல சுமூகமான உறவினைப் பேணி வந்தாலும், தனது உண்மை உதயத்தில் இது போன்ற கட்டுரைகளைப் பிரசுறித்தால் தீவிர தவ்ஹீத் பின்னணி கொண்டவர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகுவேன் என்று பயந்து பின்வாங்குகிறாரோ தெரியவில்லை.
ஆனால், மறுபுறம் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் உள்ளூர் தவ்ஹீத் உலமாக்களையும், சவுதி அஶேபிய ஸலப் உலமாக்களையும் மிகவுமே மதிப்பதைக் கண்கூடாகக் காணலாம். பிக்ஹூ சம்பந்தமான விடயங்களில் சவுதி அஶேபிய உலமாக்களான செய்க் பின்பாஸ், செய்க் உஸைமின் மற்றும் செய்க் அல்பானி, ஸல்மான் அவ்தா போன்ற இஸ்லாமிய அறிசர்களின் தீர்வுகளுக்ேக அதிக முக்கியத்துவம் கொடுப்பதைக் காணலாம். உள்ளூர் தவ்ஹீத் உலமாக்களுக்கும் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக மதிப்புக் கொடுப்பதைக் காணலாம். எந்தளவுக்ெகனில் தவ்ஹீத் ஜமாஅத்துக்குள்ளேயே பல பிரிவுகள் உடைந்து தமக்குள் முட்டி மோதிக் கொள்ளும் போது பாவிக்கும் வசன நடைகளைக் கண்டு இவர்களை விட ஏனைய ஜமாஅத் சகோதரர்கள் எமக்கு மரியாதை தருகிறார்கள் என்று சொல்லும் மூத்த தவ்ஹீத் உலமாக்களைக் கண்டுள்ளேன்.
அன்பின் தவ்ஹீத் சகோதரர்களே ! நீங்கள் நீதி செலுத்துங்கள். உங்களைச் சாராத அமைப்புக்கள் செய்யும் நற்பணிகளை மனம் திறந்து பாராட்டுங்கள். அந்த அமைப்புக்களின் இஸ்லாமிய அறிசர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களுடைய அறிவியல் பங்களிப்புக்களைப் பாராட்டுங்கள். தவறுகளை வினயமாக சுட்டிக் காட்டுங்கள். யாரும் இங்கு மலக்குகள் அல்ல. யாரும் இங்கு சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டவர்கள் அல்ல. எல்லோரும் இச்சை நிறைந்த சதைப் பிண்டங்கள். நாவு மற்றும் மர்மஸ்தானம் என்ற இரண்டு கொடிய விலங்குகளைக் கொண்டவர்கள்.
வௌிநாட்டுப் பணத்தில் நீங்கள் தஹ்வா செய்வதை நாம் பிழை என்று சொல்லவே இல்லை. வௌிநாட்டுப் பணத்தில் உங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டால் அதனை ஹராம் என்று சொல்ல எமக்கு எந்த அருகதையும் இல்லை. தவ்ஹீத் வாதிகளுக்கு வௌிநாட்டுப் பணம் வருகின்றது என்று சொல்லும் எல்லோருக்கும் வௌிநாடுகளில் இருந்து பணம் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஜமாஅதே இஸ்லாமிக்கும் வௌிநாட்டு நிதி வருகின்றது. ஜமாஅதுஸ் ஸலாமாவுக்கும் வருகின்றது. தப்லீக் ஜமாஅத்துக்கும் வருகின்றது. ஒரு வித்தியாசம், அவர்களை விட உங்களுக்கு கொஞ்சம் கூட வருகின்றது. மேற்கூறிய எல்லா இயக்கங்களையும் " வஹாபிகள்" என்று திட்டித் தீர்க்கும் தரீக்காக்களுக்கும் பணம் வருகின்றது. மூச்சுக்கு முந்நூறு தடவை வஹாபிகள் என்று சவுதி அஶேபியாவை முழு நேரமும் விமர்சித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள ஷீஆ நாதாரிகளுக்கும் ஈரானிலிருந்து இதனை விட பல மடங்கு நிதி வருகின்றது. எல்லா அடிப்படைவாத இயக்கங்களுக்கும் வௌிநாட்டு நிதி வருகின்றது என்று சொல்லித் திரியும் பொது பலசேனாவுக்கும் பணம் வருகின்றது. தம்மைத் தவிர எல்லோருமே "குப்ரிய்யத்" என்று சொல்லும் ஐஸ்ஐஸ்கும் உலகின் எல்லா பாகங்களில் இருந்தும் நிதி வருகின்றது. இவை எல்லாவற்றையும் விஞ்ச கிறிஸ்தவ என்.ஜீ.ஓக்களுக்கு வரையறையே இல்லாமல் நிதி கொட்டிக் கொண்டிருக்கின்றது. இந்நிதிகள் மிக நல்ல செயற்றிட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. சில கருப்பாடுகளின் "பொக்கட்"டுக்களிலும் தஞ்சமடைகின்றது. இப்படியான கருப்பாடுகள் எல்லா இயக்கங்களிலும் உள்ளார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பரஸ்பரம் பாராட்டி, வாழ்த்தி, நற்செய்தி கூறி, பொதுவான விடயங்களில் உடன்பட்டு, தவறுகளை கனிவாக முன்வைத்தால் யாரும் தவறுகளை ஏற்றுக் கொள்ளப் பின்வாங்க மாட்டார்கள்.

0 Comments