– நஜீமா –
சவூதி அரேபியாவின் பிரபல வங்கிகளில் ஒன்று றாஜிஹி் வங்கி. அதன் ஸ்தாபகர் றாஜிஹி அவர்கள். இளமையில் வறுமையோடு போராடியவர். அவர் வாழ்வின் உண்மைச் சம்பவம் ஒன்று.
ஒரு பேட்டியின் போது அவர் கூறியது, நான் சிறுவனாக இருக்கும் போது ஒரு முறை என் வகுப்பு மாணவர்கள் சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொள்ள இருந்தார்கள். அதில் கலந்து கொள்ள என்னிடம் பணம் இல்லை. வறுமை காரணமாக வீட்டிலும் கிடைக்காது.
வெறும் ஒரே ஒரு ரியால்தான். என்ன செய்வது என் நிலையை நினைத்து தனியே நான் அழுது கொண்டிருந்தேன். வெட்கமாக வேறு இருந்தது. நான் அழுவதைக் கண்ட ஓர் ஆசிரியர் என்ன நினைத்தாரோ, அந்த ஒரு ரியாலை என்னிடம் தந்து நீயும் பயணத்தில் கலந்து கொள் என்றார். அவர்மூலம் என் ஆசை நிறைவேறியது.
பணத்தின் பெருமையை உணர்ந்தேன் அதை தேடுவதற்காக கடுமையாக உழைத்தேன். எந்த நிலையிலும் அந்த பலஸ்தீன ஆசிரியரையும் ஒரு ரியாலையும் நான் மறந்ததே கிடையாது. ஓரளவு நான் வளர்ந்து விட்டேன் என் ஆசிரியரை தேட ஆரம்பித்தேன்.
அவரை நான் சந்தித்த போது அவர் வறுமையிலும் முதுமையிலும் இருந்தார். ஒரு ரியால் கொடுத்து சுற்றுலா அனுப்பினீர்களே ஒரு மாணவன் ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டேன் நிறைய ஞாபகமூட்டலின் பின் புரிந்து கொண்டார். நீங்கள் செய்த உதவிக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஒரு ரியாலை திருப்பி தர போகிறாயா என கேட்டு சிரித்துவிட்டு தன் மகனுக்கு ஒரு வேலை மட்டும் தந்தால்போதும் என்றார்.
என் ஆசிரியருக்காக நான் வாங்கி இருந்த வாகனத்தில் அவரை அழைத்துக் கொண்டு அவருக்காக வாங்கிய வில்லா முன் வாகனத்தை நிறுத்தி இது உங்களுக்காகவே என பணிவுடன் கூறினேன். அத்தோடு அவர் வாழ்நாள் முடியும் வரை அவர் விரும்பிய ஒரு தொகையை வங்கியில் சம்பளமாக் வழங்குவதாகவும் கூறினேன் அவர் மகனுக்கு என் வங்கியி்ல் உத்தியோகமும் கூட. ஒரே ஒரு ரியாலுக்கு இது மிக மிக அதிகம் என்று கூறினார். ஆனால் என்னை பொறுத்த வரை அன்றய நிலையில் அந்த ஒரு ரியால் இதைப் போல் பத்து வில்லாக்களையும் பத்து கார்களையும் விட பெறுமதி மிக்கது. என் வாழ்க்கைக்கே ஆதாரமாக அமைந்தது ஒரே ரியால்தான் அதை அலட்சியப்படுத்கி விடாதீர்கள்.



0 Comments