Subscribe Us

புத்தளம் முச்சக்கரவண்டி விபத்தில் வபாத்தானவர்களின் விபரம் இதோ...


புத்தளம்  முந்தல், கியன்கல்லி பகுதியில், சிறியரக லொறியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மூவர் உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று  புதன்கிழமை(15) மாலை இடம்பெற்ற விபத்தில், முந்தல், மதுரங்குளி கனமுல்ல பகுதியைச் சேர்ந்த, ரஹிம் மொஹமட் ரசாம் ( வயது 22), நௌபர் மொஹமட் சாஜித் (வயது 22) மொஹமட் முஹமது மவுஜீன் (வயது 37) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த மூவரும் படுகாயமடைந்த நபரும், நீர்கொழும்பிலிருந்து முச்சக்கரவண்டியில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, முந்தல் பகுதியில் வைத்து சிறிய ரக லொறியுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments