Subscribe Us

கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட வைத்திய சாலைகளுக்கு மூவாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


கிழக்கு மாகணத்தில் உள்ள திருக்கோணமலை , அம்பாறை மற்றும் மட்டகளப்பு மாவட்டம்களில் உள்ள கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட வைத்திய சாலைகளுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினறும் பிரதி அமைச்சருமான பைசல் காசிம் அவர்களின் முயற் சியினால் மத்திய அரசாங்கத்தினால் மூவாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யபப்டவுள்ளது  அத்துடன் கிழக்கு மாகாணத்தில் நிலவும் வைத்தியர்கள் , தாதியர்களின் பற்றாக்குறையினை தீர்ப்பதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது . 

மேலும் பிரதி அமைச்சர் விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளை பார்வையிடவுள்ளார் . 

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டம்களில் உள்ள வைத்திய சாலைகளின் குறைபாடுகளை பிரதி அமைச்சர் அண்மையில் விஜயம் செய்து பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments