புத்தளம் நகர சபையினால் நடாத்தப்பட்டு வருகின்ற விஷேட தேவையுடையோர்க்கான மத்திய நிலையத்திற்கு, Care and Share எனும் மகளிர் அமைப்பினால் பல்வேறு உதவிகள், அண்மையில் வைபவ ரீதியாக வழங்கிவைக்கப்பட்டன.
விஷேட தேவையுடையோர்க்கான மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் புத்தளம் நகர சபை பொது சுகாதரகர் N. சுரேஷ் மற்றும் உத்தியோகத்தர்கள், Care and Share அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது தொலைக்காட்சி பெட்டி, DVD Player, அப்பியாச பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரனங்கள் என்பன வழங்கப்பட்டன.










0 Comments