அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு....29.05.2016 ஆம் திகதி ''ராவய" பத்திரிகையில் 11 ஆம் பக்கத்தில் வெளியான ஒரு அதிர்ச்சிதரும் செய்தியை உங்களோடு பகிரலாம் என எண்ணுகிறேன்.
மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் தொகை இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1/3 பங்காகும்.
இலங்கையின் உள்ளூர் உற்பத்திகளில் 1/2 பகுதி மேல் மாகாணத்திலேயே நடைபெறுகிறது.இம்முறை சில தினங்கள் ஏற்பட்ட வெள்ள பெருகின் பாதிப்பு வாருடத்தின் தேசிய உற்பத்தியின் அளவை (வருடாந்த வளர்ச்சி விகிதாசரம்) 03% அளவில் வீழ்ச்சி அடையலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த இயற்கை அணர்த்ததினால் 70 வீதமான அபிவிருத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு அதன் கேந்திர இடமாகும். இங்கு ஏற்படும் இயற்கை அணர்த்தங்களுள் பிரதானமானது வெள்ள அதிகரிப்பேயாகும்.
இதன் முக்கிய இடத்தை களணி ஆறு வகிக்கிறது.சமீபத்திய Vஎள்ள நிலைமைகளின் பின்னர் ஜனாதிபதியின் கட்டளைக்கிணங்க வெள்ள அபாயம் நிலவலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளிலிருந்து மக்களின் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும்.
இவ்வறு இடம் பெயர உள்ள குடும்பங்களின் தொகை 150000 ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குடும்பங்களும் இதில் அடங்கும்.
நான் சொல்ல வந்த விடயம் அது மட்டுமல்ல.. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் கொழும்பை தாக்கும் வெள்ள நீர் சீக்கிரமே வழிந்தோடும் பொறிமுறை ஒன்று திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டது அதன் படி களணி ஆற்றில் வெள்ள அதிகரிப்பு ஏற்படும்போது பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் வரை படமாக்கப் பட்டன.இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட உலக வங்கி இதற்கான உதவியை உடனடியாக வழங்க தீர்மாணித்தது மட்டுமல்லாமல் அதற்கான நிதியை ஒதுக்கவும் செய்தது.
அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கை அரசை வேண்டி இருந்தது. நிலத்துக்கடியால் குழாய் அமைத்து கடலுக்குள் பாச்சும் செயல்முறையே அது. அவ்வாறான செயற்றிட்டத்தை திட்டமிட முதலில் தகுதி வாய்ந்த ஒரு சர்வதேச நிறுவனத்தை டெண்டர் மூலமாக தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதால் உலக வங்கி தனது நிதியை இடை நிறுத்திக்கொள்ள தீர்மாணிக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அது கிடப்பில் உள்ளது அல்லது மந்த கதியில் நடை பெறுகிறது என்பதே கசப்பான உண்மை.
இதற்குப்பதிலாக வருடத்தில் ஏற்படும் கடும் கோடையினாலும் கடும் மழியினாலும் பாதிப்புறும் பொலொன்னறுவை மாவட்டத்திற்கான அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான திட்டத்தை முன் வைத்து அதற்கு உதவுமாறு சர்வதேசத்தை கோரும் பிரேரனயொன்று முன்வைக்கப்பட்டுள்ளது..
(இவ்வாறு தொடருகிறது அக்கட்டுரை) ஜனாதிபதி பதவிக்கு வந்ததிலிருந்து பொலொன்னறுவை மாவட்டத்தின் பேரில் காட்டும் அதீத கரிசனை பலரையும் விசனத்துக்குள்ளாக்கி இருக்கிறது.
கடந்த வரவு செலவு திட்டத்திலும் பொலொன்னறுவை மறுமலர்ச்சிக்கென விசேஷ நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது மக்கள் அறிந்ததே. அதற்காகத்தான் இந்த பதிவிற்கான படத்தை இவ்வாறு அமைத்துளேன். (இன்ஷா அல்லாஹ் இவ்வாறான் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் தொடரும். இந்த செய்தியை இட்டு மஹிந்தவின் கால் தூசை நக்குபவர்கள் சந்தோசப்பட வேண்டாம்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் தவறுகளை அதனை தெரிவு செய்த நாம் அதன் தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம் என்பதே உண்மை)
-Haja SahabDeen-


0 Comments