Subscribe Us

header ads

கற்பிட்டி மற்றும் அக்கறைப்பற்று ஆகிய பிரதேசங்களில் சுத்தமான குடிநீர்


"மெகா ஆரோ" திட்டத்தின் மூலம் புத்தள மாவட்டத்தில் கற்பிட்டி மற்றும் அக்கறைப்பற்று ஆகிய பிரதேசங்களில் உள்ள 30க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க மு. கா , மாகாணசபை உறுப்பினர் நியாஸ் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாக தலைவர் ரவுப் ஹகீம் நடவடிக்கை.
 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வடமேல்மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்கள் தலைவர் ரவுப் ஹகீம் அவர்களிடம் வேண்டியதுக்கிணங்க புத்தள மாவட்டத்தில் கற்பிட்டி மற்றும் அக்கறைப்பற்று ஆகிய பிரதேசங்களில் உள்ள 30க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு "மெகா ஆரோ" திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் கற்பிட்டி பிரதேசத்தில் ஒரு தாங்கியும், அக்கறைப்பற்று பிரதேசத்தில் மற்றுமொறு தாங்கியுமாக மொத்தமாக இரு பாரிய நீர்த் தாங்கிகள் அமைக்கப்படவுள்ளன. 

ஒரு தாங்கியில் சுமார் 13 அல்லது 24 கிராமங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க முடியும். 

இதனை உடனடியாகச் செயற்படுத்தும் வகையில் அமைச்சர் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய நீர்வழங்கல் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த வாரம் புத்தளத்துக்கு விஜயம் செய்தனர். 

இதன்போது கூடுதலான நீரைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நீர்வளம் பற்றி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இறுதியில் நீர் ஊற்று அதிகமாகவுள்ள மேற்கூறிய இரு இடங்களும் அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

எந்த இரசாயனப் பதார்த்தம் கலந்த நீரையும் சுத்தமான குடிநீராக மாற்றி அதனை மக்கள் பாவனைக்கு வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் .

Fareed Muhammed

Post a Comment

0 Comments