Subscribe Us

header ads

அல் அக்ஸா தே. பா யின் புதிய பாடசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு...


மதிபிற்குரிய SDC தலைவி, செயலாளர் உற்பட உறுப்பினர்களுக்கு,

அமைந்திருக்கும் புதிய SDC யினருக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு இச்சிறியவனுக்கு தெரிந்த சில விடயங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்...


பல சவால்களுக்கு மத்தியில் பல்துறை சார்ந்த ஆளுமைகளைக் கொண்ட 7 பெற்றோர்கள் SDC பொதுக் குழுவில் நீண்டகால இடைவெளியின் பின்னர் தெரிவுசெய்யப்படுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!

எமது ஊரின் வழமையான பாணியில் ஒரு பொதுஅமைப்பின் நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அடிக்கடி கூடி வீர வசனங்களையும் முன்னைய நிருவாகிகள் தொடர்பான வசைபாடல்களை அள்ளி வீசிவிட்டு ,வார்த்தைகளால் காற்றை மாசாக்கிவிட்டு, கதிரைகளை உணர்வுகளின் கொந்தளிப்பால் சூடாக்கிவிட்டு ,வெறுமனே காலங்களை கடத்திவிட்டு கலைந்து செல்லும் குழுக்களை விட இந்த புதிய SDC பொதுக் குழு எமது பாடசாலையின் வளர்ச்சியில் முழு அக்கறையுடன் செயற்படும் என்ற பூரண நம்பிக்கையுள்ளது. இவர்களது காலம் அல் அக்ஸாவிற்கு மீண்டுமொரு பொற்காலத்தை உருவாக்கும் என நம்புகிறேன். அதற்காக சர்வ வல்லமை பொருந்திய நாயனை பிராத்திக்கிறேன். ..

01. “பாடசாலை அபிவிருத்தி குழு” விற்கென Office தேவையை முன்வைத்து அதற்கான இடத்தை பெற்றுக்கொள்ளல்.

i. அடிக்கடி கூட்டம் போட்டு பேசிவிட்டு கலைந்து போவதை தவிர்க்கும் முகமாக வாரத்தில் 3 நாட்கள் இரவு நேரத்தில்( Mahrib To Isha ), அலுவலகத்தில் சந்தித்தல். (இது கூட்டமில்லை நேரமிருப்பவர்கள் இங்கு வந்து கலந்துரையாடலாம்.)

ii. உப தலைவர், செயலாளர், பொருளாளர் இவர்களில் ஒருவர் தவறாது சுழற்சி முறையிலாவது கலந்து கொள்ளல். இதில் பேசப்பட்ட விடயங்களை மாதாந்த கூட்டத்தில் முன்வைத்து ஒப்புதலை பெறல்.

iii. SDC யின் திட்டங்கள், தரவுகள் போன்ற விடயங்களை அலுவலகத்தில் காட்சிப்படுத்தல்.

02. கலைக்கப்பட்ட “பாடசாலை அபிவிருத்தி குழு” வுடன் சினேக பூர்வ கூட்டத்திற்கு எற்பாடுகளை செய்தல்.

i. இவர்கள் விட்டு சென்ற திட்டங்கள், அதில் முக்கியான திட்டங்கள் தொடர்பான கோவைகள், தகவலை திரட்டுதல்.

ii. மாறி மாறி வரும் புதிய நிர்வாகிகள் அனைத்தையும் புதிதாக ஆரம்பித்தல். பழையவைகளை வீண் பேச்சு பேசி கிடப்பில் போடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தல்.

iii. இவர்களது நிருவாக காலத்தில் இவர்களுக்கு இருந்த பலம், பலவீனம் தொடர்பாக “SWOT” ஆய்வு ஒன்றை செய்து முன் அனுபவம் பெறல்.

iv. முன்னைய நிருவாகிகள் எதிரிகள் போல பார்க்கும் மன நிலை நீங்கி கட்சி பேதம் மறந்து பாடசாலைக்காக SDC விடயங்களில் சிநேகபூர்வ உறவை பேணல்.

“என்னதான் நாம் துறைசார் ஆளுமைகளைக் கொண்டவர்களாக நாம் இருந்தாலும் முந்தையவர்களின் அனுபவம் பெறுமதியானது”

03. பாடசாலையின் மனித, பௌதீக வளங்களின் உச்ச பயன்பாட்டுக்கு பாடசாலை நிருவாகத்திற்கு உதவுதல்.

i. பாடசாலை நிருவாகத்திற்கு இடையூறு விளைவிக்காமல் பயன்பாடற்று இருக்கும் மனித வளங்களை புதிய துறைகளுக்கு பயன்படுத்தல். இதற்காக புதிய பொறிமுறைகளை உருவாக்குதல்.

ii. பயன்பாடற்று கிடக்கும் பௌதீக வளங்களை பழைய மாணவர் அமைப்புடன் இணைந்து சீரமைத்து உச்ச பயன்பாட்டுக்கு வழியமைத்தல்.

04. பழைய மாணவர் அமைப்புடன் இணைந்து செயற்படல்.

i. பழைய மாணவர் அமைப்பை பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் வேலையாட்கள் போல நடத்தும் நிலையில் இருந்து விடுபட்டு அவர்களின் சுயாதீன செயற்பாடுகளுக்கு SDC பூரண ஆதவை கொடுக்க வேண்டும்.

ii. பழைய மாணவர் அமைப்பை கல்வி சார் அபிவிருத்தி திட்டங்கள், மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள், பாடசாலை வளங்களை பேணல் போன்ற துறைகளில் சுயாதீனமாக செயற்பட விடல்.

iii. பெற்றோர்களை பாடசாலையுடன் இணைத்தல், பாடசாலைக்கான மனித பௌதீக வளங்களை புதிதாக பெறல், பாடசாலையின் வளர்ச்சி தொடர்பில் புதியனவற்றை அறிமுகப்படுத்தல் போன்ற முக்கிய விடைகளில் கவனம் செலுத்தல்.

05. பெற்றோர்களை பாடசாலையுடன் இணைக்க புதிய திட்டங்களை, உத்திகளை கையாளல்.

i. தரம் 6 தொடக்கம் 8 வரையான ஒரு பிரிவும், தரம் 9 தொடக்கம் 11 வரையான ஒரு பிரிவும் மற்றும் உயர்தரம் என பிரிவுகளாக்கி இப்பிரிவு மாணவர்களின் பெற்றோர்களுக்கான அமைப்புகளாக ஆரம்பித்தல்.

ii. இம்மூன்று பெற்றோர்கள் பிரிவுக்கும் தனி தனி நிருவாக அலகை ஏற்படுத்தல்.

iii. இம்மூன்று பெற்றோர்கள் பிரிவினரையும் மாணவர்களின் கல்வி சார் அபிவிருத்தி திட்டங்கள், மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களில் கவனம் செலுத்த தூண்டல்.

iv. இதற்கான நிகழ்சிகளை ஏற்பாடு செய்து அவர்களையே நடத்த தூண்டுதல் இதன் மூலம் பெற்றோர்களுக்கும் பாடசாலைக்குமான தொடர்பு அதிகரிக்கும்.
06. எதிர்கால செயற்பாட்டுக்காக நிதித் தேவைகளை பாதீடு செய்து சீரான நிதி நிலையை பேணல். ( இது எதிர்காலத்தில் SDC உறுப்பினர்களுக்கு இடையில் எழும் தேவையற்ற முரண்பாடுகளை குறைக்கும்)

07. மூன்று வருட காலத்தில் பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய தேவைகளை மட்டும் இனம்கண்டு நிறைவேற்றுவது SDC யின் முக்கிய பொறுப்பாக கொண்டு இயங்கினால் நிச்சயம் மாற்றம் கிடைக்கும்.

பிழைகள் இருப்பின் அடியேனை அன்பிற்குரிய ஆசான்கள் மன்னிப்பார்கள் என நம்பி பதிவிடுகிறேன்.

Samsham Shafeek

Post a Comment

0 Comments