தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச படங்களை வைத்திருந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் பலாங்கொடை சிவில் பாதுகாப்பு படை தலைமையகத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை 41 வயதான திருமணமானவர் என்றும், குறித்த பிரதேச பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஆசிரியை கலந்துகொண்ட போதே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆசிரியையின் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே குறித்த படை முகாமில் உள்ள பலரும் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கூரகல பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளையிடும் அதிகாரியான கேர்ணல் புஞ்சி பண்டாரவினால் குறித்த ஆசிரியையின் கைத்தொலைபேசி பரிசோதிக்கப்பட்டதாகவும் இதன்போதே ஆபாசபடங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஆசிரியை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments