பாகிஸ்தானின் ஆயுதங்களினால் இந்தியத் தலைநகர் டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கி அழிக்க முடியும் என பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அப்துல் குவாதீர் கான் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் தனது முதலாவது அணு ஆயுதப் பரிசோதனையை நடத்திய 18ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டத்திலேயே அப்துல் குவாதீர் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கடந்த 1984 ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தானால் அணுஆயுத நாடாக மாறி இருக்க முடியும். ஆனால், அப்போதைய ஜனாதிபதி ஜெனரல் ஜியா உல் ஹக், அனுமதி மறுத்ததாலேயே தாமதம் ஏற்பட்டது.
அணு ஆயுத சோதனை நடத்தினால் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடலாம் என்பதாலேயே அப்போதைய ஜனாதிபதி ஜியா உல் ஹக் அனுமதி மறுத்திருந்தார்.
இந்நிலையிலேயே நாங்கள் எங்களுடைய முதலாவது அணுவாயுதப் பரிசோதனையை 1998 ஆண்டு நடத்தியிருந்தோம். எப்படியிருப்பினும், ராவல்பிண்டி அருகிலுள்ள கஹோட்டா அணு ஆயுத ஆய்வு மையத்தில் இருந்து இந்தியத் தலைநகர் டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கி அழிக்ககூடிய பலத்தினை தற்போது நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.


0 Comments