உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே 31ஆம் திகதி சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
இதனை உலக சுகாதார நிறுவனம் 1887ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது.
உலக அளவில் புகைப்பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் புகையிலையை மெல்லுவது, புகையிலை பொருட்கள் கலந்த பான், பாக்கு, மூக்குப்பொடி, பீடி, சிகரெட் போன்றவற்றை நுகர்வதை அன்றாடம் காண முடிகிறது. புகையிலை பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழப்பதாக சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், புகையிலையினால் ஏற்படும் வாய்புற்றுநோய், லட்சத்தில் 10 பேரை பாதிக்கிறது.
உலகில் 47 சதவீத ஆண்களும், 12 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள்.
மேலும், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இவ்வாறு புகை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
புகையிலையால் பல நோய்கள் ஏற்பட்டாலும் அதை தவிர்ப்பதால் உடலில் மட்டுமல்ல வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்படுவதாக சுகாதார துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது, இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது, நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்பட மாட்டார், சளி மற்றும் இருமல் மறையும், பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும், நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின் சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது, உங்கள் சுய தோற்றம், சுயநம்பிக்கை வளரும், எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராக இருப்பீர்கள், அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக இருப்பீர்கள், புகையிலை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் பல காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒருவரின் ஆறாவது விரலாகவும் நெருங்கிய நண்பனாகவும் இந்த சிகரட் காணப்படுகின்றது.
இவ்வாறான கெடுதல் விளைவிக்கும் நண்பன் நமக்கு தேவையா?, நன்மைக்கு வழிகாட்டும் ஆறாம் அறிவு போதும். அந்த ஆறாம் விரல் வேண்டாமே...!
ஒரு ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க முயல்வோம்.


0 Comments