ஜப்பான் நாட்டில் தவறு செய்த 7 வயது மகனை அவனது பெற்றோர் தனியாக கொடூரமான விலங்குகள் சுற்றி திரியும் வனத்தில் விட்டு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் வடக்கு ஒகாய்டோவில் மாகாணத்தில் பெற்றோர்கள் சேட்டை செய்த தங்கள் 7 வயது மகனை கொடூர விலங்குகள் உள்ள காட்டில் தனியாக விட்டு விட்டு வந்து உள்ளனர். பின்னர் சென்று பார்த்த போது சிறுவனை காணவில்லை. பெற்றோர் தனது பிள்ளையை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணை நடத்திய போது பெற்றோர்கள் நாடகமாடியது தெரிய வந்தது. இந்த காடு கரடிகள் நிரமபிய காடாகும்.
இது குறித்து சிறுவனின் தந்தை கூறும் போது ‘எனது மகன் படுசுட்டியாக இருந்தாலும், அவனை தைரியமிக்கவனாகவும் ஒழுக்கம்மிக்கவனாகவும் வளர்ப்பதே எனது லட்சியம். எனது மகனுக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக தான் அவனை காரிலிருந்து இறக்கி வனத்தில் விட்டுவந்துவிட்டோம்’ என கூறினார்.
பெற்றோரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த போலீசா ஹெலிகொப்டர்களில் 130 பேர் கொண்ட மீட்புபடையினருடன் காட்டிற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


0 Comments