Subscribe Us

header ads

மிகவும் பின் தங்கிய இந்த கிராமத்தில் ஒதுங்கிய அழகிய பெண் (விபரம் இணைப்பு)


இந்தோனேசியாவில் உள்ள தீவுகளில் ஒன்றான பங்ஹாய் என்னும் தீவில் கரை ஒதுங்கிய பெண் பொம்மை பெரும் தெய்வீகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் பின் தங்கிய இந்த கிராமத்தில் ஒதுங்கிய அழகிய பெண் பொம்மை அக்கிராமத்தையே பெருத்த பரபரப்பிற்கும் உள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் இணையத் தளங்களில் பரவலாக வெளியாகி இருக்கிறது.
கரை ஒதுங்கிய இந்த பொம்மை சொர்க்கத்திலிருந்து இறைவனால் தமக்களிக்கப்ப்பட்ட தேவதையாக கிராம மக்கள் கருதினார்கள். இந்தோனேசியாவில் சூரிய கிரகணத்தை அடுத்து, முஸ்லீம்களால் கொண்டாடப்படும் பெரும் பண்டிகை தினத்தன்று குறித்த பொம்மை கடலில் மிதந்து வந்தது. இதுவே அக்கிராமத்தில் தெய்வீகப் பரபரப்பை பெருமளவில் ஏற்படுத்தக் காரணமாய் அமைந்தது.
பொம்மையை தேவதைக்யாக கருதிய அக்கிராமத்தவர்கள் முஸ்லீம் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையை பயபக்தியோடு அணிவித்தார்கள். படகில் ஏற்றி கடலில் அதனைக் கொண்டு திரிந்து ஆசீர்வாதம் பெற்றனர். தரைக்கு வந்ததும் அதனை நாற்காலியில் பவ்வியமாக அமரவைத்து எல்லோரும் சென்று வழிபட்டிருக்கிறார்கள்.
இத்தேவதையால் கிராமத்தில் ஏற்பட்டுவந்த பலத்த பரபரப்பும் பரவிவரும் வதந்திகளும் அங்கு பதற்றநிலையை ஏற்படுத்தும் எனக் கருதிய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். அவர்கள் முன்னெடுத்த விசாரணைகளால் குட்டு உடைந்தது. மக்களின் வழிபாட்டிற்கு உரிய தேவதை அல்ல என்பதையும் அது ஒரு செக்ஸ் பொம்மை என்பதையும் அவர்கள் கண்டறிந்தார்கள்.
நீண்ட காலமாக கடற்போக்குவரத்தில் ஈடுபடும் ஆண்கள் தமது பாலியல் வடிகாலாகப் பயன்படும் செக்ஸ் பொம்மை அது என்று தெரிய வந்தது. மேலும் இது பலூன் போன்றது. தேவைப்படின் காற்றை ஊதி உப்ப வைக்கவும்.
தேவையில்லாத நேரத்தில் காற்றைப் பிடுங்கி , சுருக்கவும் முடியும். கடலில் பயணித்த உல்லாச பயணிகள் படகு , அல்லது பண்டப் போக்குவரத்துக் கப்பல் ஒன்றில் இருந்து யாரோ காற்றூதப்பட்ட நிலையில் இந்த பொம்மையை கடலில் எறிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
செக்ஸ் பொம்மைகள் தவறாகக் கருதப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல. கடலில் மிதந்த காற்றூதப்பட்ட செக்ஸ் பொம்மையை கடலில் மூழ்கும் பெண்ணாகக் கருதி ஒருமுறை சீனக் கடற்படையினரும் ஏமாந்திருக்கிறார்கள்.



Post a Comment

0 Comments