Subscribe Us

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அநீதியிழைக்கப்பட்டார்களா??


இரு வாரங்களுக்கு முன் நாட்டில் ஏற்ப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பெய்த தொடர் மழையினால் நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டது நாம் யாவரும் அறிந்த உண்மையே!

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கான் உதவிகளை செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு நல்லாட்சி அரசாங்கத்தில் அவர்களுக்கான நஷ்ட்ட ஈடுகள் வழங்கப்பட்டதா? இனியாவது வழங்கப்படுமா?என்ற கேள்வி, மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவுகள் வெளி நாடுகளிலிருந்து வழங்கப்பட்டும் அது இண்னும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்றடைய வில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றாம் சுமத்துவதாக நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பொறுப்பான அரசியல் வாதிகள்,மக்கள் பிரதிநிதிகள்,தங்களை மக்களிடையே தேசிய தலைவர்கள் என அறிமுகப்படுத்துகின்றவர்கள் அனைவரும் ஒன்றினைந்து உங்களை நம்பி வாக்களித்த அப்பாவி மக்களுக்கான நிவரண பொருட்கள் மற்றும் உதவித்தொகைகளை போராடி பெற்றுக்கொடுக்குமாறு பணிவன்பாய் வேண்டிக்கொள்கின்றோம்.

ஹமீத் உஸாமா(பர்ஜீஸ்) செயலாலர்
முள்ளிபுரம் பழைய மாணவர் அமைப்பு

Post a Comment

0 Comments