-Farook Sihan-
வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிப் பாவா பாறுக் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனத்தை கையளிக்க தவறியுள்ளதால் தேசியப் பட்டியல் உறுப்பினராக வர தகுதி அற்றவர் என தற்போது முகநூல்களில் விமர்சிக்கப்படுகின்றது.
முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சட்டத்தரணி தொழிலை மேற்கொண்டு வருகின்ற முத்தலிப் பாவா பாறுக் கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக அதாவது 2013 ஆண்டு காலப்பகுதியில் இருந்துள்ளார்.இவருக்கென உத்தியோக பூர்வ வாகனம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் 2 ஆயிரத்திற்கு குறைவான வாக்குகளையே பெற்றிருந்திருந்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் பல சுகபோகங்களுடன் வாழந்துள்ளதாகவும் வன்னியில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இருந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
முன்னாள் மறைந்த வன்னி முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூரின் மறைவை அடுத்து சட்டத்தரணி பாறுக் பாராளுமன்ற உறுப்பினராக வலம் வந்தார்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் அப்பகுதியை அபிவிருத்தி செய்வதை விடுத்து தனது தொழிலையே மேற்கொண்டதாக பகிரங்கமாக விமர்சிக்கப்ட்டுள்ளது.
ஆனால் இவர் தேசிய பட்டியல் பாராளுன்ற ஆசனத்தை தருமாறு கட்சித் தலைமையை கோருவது நியாயமில்லை என அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
ஏனெனில் கடந்த காலங்களில் கட்சி விசுவாசத்தை காட்டாது செயற்பட்டமையும்.தற்போது அவர் பாவித்து வருகின்ற வாகனமும் எடுத்து காட்டாகும்.
எனவே இவ்வாறான நபர்களின் முகங்களை இனங்கண்டு பாராளுமன்ற ஆசனத்தை தகுதி வாய்ந்தவர்களுக்கு கட்சி தலைமை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






0 Comments