நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் தாமும் பங்கேற்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
இயற்கையின் சீற்றம் விரைவில் அகன்று உங்கள் அனைவரினதும் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்கின்றேன்.
அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய அழிவுகளை வரையறுத்துக் கொள்ள கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அனைவரிடமும் கௌரவமாக வேண்டிக் கொள்கின்றேன்.
இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அனர்த்த நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாரஹென்பிட்டி அபாயராமயவில் அமைந்துள்ள சேகரிக்கும் நிலையம் ஒன்றின் ஊடாக உலர்ந்த உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. உலர் உணவுப் பொருட்கள், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்க முடியும்.
அனர்த்தம் காரணமாக உயிரிழந்த அனைவரினதும் குடும்பங்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என மஹிந்தவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments