Subscribe Us

header ads

அலெப்போ நகரில் தொடர் தாக்குதல் நடத்தும் அசாத் அரசு - சர்வதேச நாடுகள் கண்டனம்



அசாத்தின் படைகள் அலெப்போ நகரில் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.ஏப்ரல் 22ம் தேதி முதல் சிரியா அலெப்போ நகரில் அசாத்தின்அரசு படைக்கும், அரசு எதிர்ப்பு படைக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக தொடர் வான்வழி தாக்குதல்களை அசாத் படைகள் நடத்தி வருகிறது, இதுவரை 246 பேர்கள் பலியாகி உள்ளனர் இதில் அதிகமானவர்கள் அப்பாவி பொதுமக்கள் ஆவர் .

பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த தாக்குதலில் ஒரு மருத்துவமனை மீது குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளது, மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் மீதும் குண்டுகள் வீசப்பட்டு சாகடிகப்பட்டுள்ளனர்.

சண்டையை முடிவுக்கு கொண்டு வர அரப் லீக் அமைப்புக்கு கத்தார் நாடு அவசர அழைப்பு விடுத்துள்ளது.எகிப்து, மொரோக்கோ,துர்க்கி பாலஸ்தின், லெபனான். லண்டன் மேலும் பல நாடுகளில் அலெப்போ நகரில் நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ரிப்போர்ட் - அபூஷேக் முஹம்மத்

Post a Comment

0 Comments