Subscribe Us

பேஸ்புக்கிள் ஒரு "ட்ரென்ட்" தங்களை பேஸ்புக் பிரபலம் என்று காட்டிக்கொள்கின்றனர்


இஸ்லாம் ஏனைய மதங்களையும் மதத்தவர்களையும் மதிக்கக் கற்றுக் கொடுக்கும் மார்க்கம்.


ஆனால் ஓரிரைக் கொள்கை என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அங்கே எந்த நெகிழ்ச்சிப் போக்கிற்கும் இடமில்ல.


இப்போது பேஸ்புக்கிள் ஒரு "ட்ரென்ட்" உருவாகி வருகிறது.

குறிப்பிட்ட சிலர் தங்களை பேஸ்புக் பிரபலம் என்றும் நடுநிலை வாதிகள் என்றும் காட்டிக் கொள்கிறார்கள்.


அப்படி காட்டிக் கொள்பவர்கள் போடும் சில பதிவுகள் இஸ்லாமிய அகீதாவின் எல்லையை விட்டு கொஞ்சம் விலகிச் செல்வதை  அவதானிக்க முடிகிறது.


இது ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை மிக  அபாயகரமான நிலையாகும்.


ஏனைய மதங்களை மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்வதன் கருத்து அவற்றை  ஆதரிக்கவேண்டும் என்பதல்ல.


இந்த பேஸ்புக் பிரபலங்களின் நட்புப் பட்டியல் முழுக்க மாற்று  மதத்து நண்பர்கள் இருப்பார்கள்.


அப்படி நற்பு பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை.


ஆனால் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் இந்த  அரை வேக்காடுகள் ஏனைய மதத்தவர்களின் "லைக்"குகளை எதிர்பார்த்து பதிவு போடுவதுதான் இங்கே இருக்கும் பிரச்சினை.


இவர்கள் தங்கள் "நடு சென்டர்" தனத்தைக் காட்டுவதற்கும்  ஏனைய மதத்து நண்பர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கும் இஸ்லாத்தை ஒரு வகையான நடமுறை சாத்தியமற்ற மதம் போல சித்தரிக்கிறார்கள்


அதேபோல் முஸ்லிம்களின்  பெரும்பான்மையானவர்கள்  அடிப்படை வாதிகள் போலவும் ஒரு கதை விடுகிறார்கள்


முஸ்லிம்கள் பிழைசெய்தால் தாரலாமாக வமர்சியுங்கள் அதற்கு இஸ்லாம்தான் காரணம் என்பது மாதிரியான ஒரு கற்பிதத்தை உருவாக்க முயற்சிக்காதீர்கள்.


உங்களுக்கு "லைக்" வேண்டும் என்றாலோ மாற்று மதத்து நண்பர்களிடம் நல்ல பெயர் வேண்டும் என்றாலோ சினிமா  விமர்சனம் எழுதுங்கள் அதுதான்
உங்களுக்கு பொருத்தம்.


"வணக்குத்துக்குறிய நாயன் வேறுயாருமில்லை" என்று முதலில் சொல்லிவிட்டுதான், "அல்லாஹ்வைத் தவிர" என்று கலிமா சொல்லியிருக்கிறோம்.


இறைக் கொள்கை குறித்த இஸ்லாத்தின் ஸ்டைல் இதுதான்.

இஸ்லாத்தில் மத நல்லினக்கம் என்பது முஸ்லிம்களும் "தன்சல்" கொடுப்பதோ "பொட்டு" வைப்பதோ அல்ல என்பதை இந்த நல்லினக்க ஏஜன்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்.


இந்த மாதிரி "லைக்" குகளுக்காக மார்க்கத்தை விளையாட்டாகக் கருதும் இந்த "நடு சென்டர்" வாதிகள் குறித்து நண்பர்கள் அவதானமாக  இருங்கள்.


அவர்களுக்கு இவைகள் குறித்தும் இவற்றின் பாரதூரம் குறித்தும் தெளிவு படுத்துங்கள்.


கேட்காவிட்டால் அவர்களை  பேஸ்புக்கிள் இருந்து நிராகரியுங்கள்.


இந்த "நடு சென்டர்" வாதிகள்  இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள்  குறித்தும் பதிவுகள் போடாமல் இருந்தால் எல்லோரது உம்புக்கும் நல்லது.

-Safwan Basheer-

Post a Comment

0 Comments