Subscribe Us

2கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணி மோசடி ரிப்கான் பதியுதீன் எதிராக முறைப்பாடு


கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனான வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், போலியான காணி உறுதிப்பத்திரத்தின் ஊடாகக் காணியை விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொழும்பு-10ஐ வசிப்பிடமாகக் கொண்ட, அப்துல் காசிம் மொஹமட் சலானி என்பவர், நவம்பர் மாதம் 16ஆம் திகதியன்று செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்கே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர்.

அதன்படி தலைமன்னாரில் உள்ள 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதான நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments