இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அஸாம்கர் என்ற ஊரிலுள்ள சிற்றுண்டிச்சாலையொன்றில் புனித அல்குர்ஆனின் வசனங்கள் பொறிக்கப்பட்ட பேப்பர் தட்டுக்கள் வாடிக்கையாளர் பாவனைகளுக்கு வழங்கப்பட்டமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் புனித வேதநூலான அல்குர்ஆனை அவமதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையை அடுத்து முஸ்லிம்கள் குறித்த கடைக்கு எதிராக நடவடிக்கைகளை தொடர்ந்து கடையின் முதலாளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
குறித்த கடையைச் சுற்றியும், குறித்த பிரதேசத்திலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நஸார் இஜாஸ்


0 Comments