பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தில் 17வயது பாடசாலை மாணவியை கடத்த முயற்சித்த முச்சக்கர வண்டி சாரதி தலைமறவாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
பொகவந்தலாவ பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பொகவந்தலாவ குயினா தோட்டபகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி குறித்த மாணவியின் படத்தை வைத்து கொண்டு உனது படத்தை முகநூல் பக்கத்தில் பதிவு செய்வேன் இல்லாவிட்டால் என்னோடு வரவேண்டுமென அந்த மாணவியை குறித்த முச்சக்கர வண்டி சாரதி மிரட்டல் ஈட்டு வந்ததாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவி முறைபாடு செய்துள்ளார்.
நேற்று மாலை முச்சக்கர வண்டி சாரதியின் மிரட்டலுக்கு பயந்து மேலதிக வகுப்பிற்க்கு செல்வதாக கூறி குறித்த முச்சக்கர வண்டி சாரதியோடு சென்ற மாணவியை பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து பொலிஸாரல் குறித்த மாணவி காப்பாற்றபட்டதாகவும் குறித்த முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கர வண்டியோடு பலாங்கொட மாரதென்ன பகுதியில் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் காப்பாற்றபட்ட சிறுமி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு குறித்த பாடசாலை மாணவி அனுப்பிவைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும்இ தப்பி ஒடி தலைமறவாகியுள்ள முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments