Subscribe Us

விழுந்தாலும் எழுந்து நிற்போம் !

வாழ்க்கையில் பல கட்டங்களில் பல்வேறுவிதமான பின்னடைவுகளுக்கும் , கஷ்டங்களுக்கும் நாம் உட்படுகிறோம். – வியாபாரத்தில் சரிவு ஏற்படுதல், – விவசாயத்தில் இழப்பு ஏற்படுதல் – உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுதல் – குடும்ப சமாதானம் சீர்குழைந்து போதல் ,  இப்படி பல தடங்கள்கள் ஏற்படுவதை காண்கிறோம். 


“வேருடன் சாய்ந்து விழுகிற மரங்களைப்போல் சிலர் தடங்கள்களின் பொழுது சாய்ந்துவிழுவதும் உண்டு.” “தடங்கள்களையும் தாமதங்களையும் வெற்றிக்குப் பாதை காட்டும் வெளிச்சங்களாக கருதுகிறவர்களும் உண்டு.” தடைகளைக்கண்டு இடையில் நின்றுவிட்டவனுக்கு வெற்றியை ஒரு போதும் கண்டுகொள்ள முடியாது.


மனிதர்கள் எல்லா நேரத்திலும் பிரச்சினைகளுக்கு மத்தியில் சிக்குண்டு, தகர்ந்து, தனிமைப்பட்டு வாழத்தேவையில்லை. எந்த ஒரு துன்பத்திற்கும் முகம் கொடுக்கக்கூடிய ஆற்றல் இயல்பாகவே மனிதரில் இருக்கவே செய்கிறது. இறைவன் அப்படித்தான் மனிதர்களை படைத்திருக்கிறான். ஒரு தொழிலில் பின்னடைந்தால், தோற்றுப்போனால் தோற்றுப்போன மனநிலையில் இருக்காமல் அதிலிருந்து மீண்டெழும் சக்தி மனிதனுக்கு இருக்கிறது.

ஆகவே விழுந்தாலும் எழுந்து நிற்போம் !


இல்ஹாம் மரிக்கார் .

Post a Comment

0 Comments