Subscribe Us

நாட்டுகோழி ரசம் செய்வது எப்படி



தேவையான பொருட்கள் :

நாட்டு கோழி - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 15
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 1
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* மிளகு, சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 

* பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

* அதனுடன் தனியாத்தூள், பொடித்த மிளகு சீரகம், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக விடவும். 

* இறக்கி வைத்து அதல் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

* நாட்டுகோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் போலவும் குடிக்கலாம்.

Post a Comment

0 Comments