பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்றிய இராணுவ வீரர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம் ஒன்று கண்டி இராணுவ பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இராணுவ தளபதியின் வேண்டுகோளுக்கினங்க டாக்டர் ஷியாம் பாரூக் அவர்கள் கண்டி மாவட்ட மனநிலை வைத்தியஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இதை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் . இந்த வகையில் நடைபெற்ற இது மூன்றாவது நிகழ்வாகும்.
இதில் மன ஆரோக்கியம் ஊக்குவிப்பு மற்றும் மன அழுத்தம் சம்பந்தமான மன நிர்வாகம், உடல் வலிமை உள்ள இந்த வீரர்களுக்கு தன்முனைப்பு, கோப மேலாண்மை, மக்களுடன் எற்படுத்தக்கூடிய உறவு மனப்பான்மை போன்ற முக்கிய விடயங்கள் சம்பந்தமான விரிவுரையும் பயிற்சி சம்பந்தமான அறிவுறுத்தலும் அளிக்கப்பட்டது. இதன் முடிவில் இராணுவ வீரர்கள் இந்த நிகழ்வின் மூலம் நல்ல பயனை அடைய முடியும் என்று தமது திருப்தியை வெளிப்படுத்தினர்.
இது போன்ற நிகழ்வுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கபெற்றிருப்பதினால் பல அரச நிறுவனங்களும் கல்வி நிலையங்களும் பயனடைய தனது ஆர்வத்தை தெரிவுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் பல பாடசாலைகளிலும் இது போன்ற நிகழ்வுகள் இவரின் பங்களிப்பில் நடைபெற்று வருகிறது. அண்மையில் கண்டி ஹேமமாலி பாலிகா வித்தியாலயத்திலும் வெற்றிகரமாக டாக்டர் ஷியாம் பாரூக் அவர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன.






0 Comments