Subscribe Us

மொஹமட் நிஷோஸின் (பேஷ்புக் பிழைகள்) கவிதை தொகுப்பு.



Mohamed Nizous

துருவி ஆராய்தல்
தொடர்ந்து குறை கூறல்

ஒருவனின் ரகசியத்தை
ஊர் முழுக்க பரப்பிவிடல்

தெருவில் போறவளை
தெளிவாகப் படம் பிடித்து
அருவருப்பு ஆடையென்று
அதற்கு லைக் கேட்டல்

அருமையாய் உள்ளவற்றை
அப்படியே கொப்பி பண்ணி
உரிமையாளர் பெயரின்றி
ஊரறியப் போட்டு விடல்.

இருவரின் பிரச்சினைக்குள்
எல்லோரும் தலைப் போடல்

குறூப்பொன்றைத் தொடங்கி
குறுக்கால அட் பண்ணல்

செருப்பு வாங்கினாலும்
ஷெல்பியுடன் படம் போடல்

சுருக்கமாய் சொல்லாமல்
சுற்றி வளைத்து ஸ்டேட் போடல்

சிர்க்கான விடயங்களை
செயார் செய்து லைக் பண்ணல்

தர்க்கத்தில் தோல்வி வந்தால்
தாறுமாறாய் விமர்சித்தல்

பரிதாப உதவி கோரலை
பத்து வருசம் பின் பகர்தல்

பெரிய மனிதர் பெயர்களிலே
பேக் ஐடி பாவித்தல்

புரியாத கவி எழுதி
புதுமை இது என்று சொல்லல்

மரியாதை தெரியாமல்
மற்றவரை அவமதித்தல்

முறையாகப் பாவித்தால்
முக நூலால் நன்மை உண்டு
அரை குறை ஆசாமிகளால்
அனைவருக்கும் சிக்கல் இங்கே.

Post a Comment

0 Comments