Subscribe Us

header ads

கற்பிட்டி ஜன்னதுல் அஸாபிர் பாலர் பாடசாலையில் புத்தக வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)

இன்று கற்பிட்டி பிரதேசத்தில் கற்பிட்டி வரலாற்றில் இடம் பெறாத நிகழ்ச்சியொன்று கற்பிட்டி ஜன்னதுல் அஸாபிர் பாலர் பாடசாலையில் இடம் பெற்றது.

இந்த பாலர் பாடசாலையின் அதிபர் J.பாஹிமா மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் ஜன்னதுல் அஸாபிர் பாலர் பாடசாலை புத்தக வெளியீட்டு விழா மிக சிறப்பாக ஜன்னதுல் அஸாபிர் பாலர் பாடசாலையில் இடம் பெற்றது.

இந்த புத்தகங்கள் மூன்று தலைப்பின் கீழ் மூன்று வகையான புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வில் கற்பிட்டியின் முன்னால் ஓய்வு பெற்ற புத்தள வலய உதவி கல்விப் பணிப்பாளர் ஜனாப் பயிருஸ்ஸமான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கற்பிட்டி HBF நிறுவனத்தின் பணிப்பாளர் A.M.M மஸூர் வைத்தியரான ஜனாப் U.M றயீஸ் மற்றும் கற்பிட்டி UDF நிறுவனத்தின் பணிப்பாளர் A.R.M முஸம்மில் மற்றும் கற்பிட்டி பிரதேச செயலக பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஜனாப் A.R.M அஸ்கர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட புத்தகங்கள் கையளிக்கப்பட்டன.

-கற்பிட்டியின் தாகம்-















Post a Comment

0 Comments