Subscribe Us

header ads

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிப்பு



இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர்  போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது. இந்தப் போட்டிகளுக்காக மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி அடுத்த மாதம் 4ம் தேதி இங்கிலாந்து செல்கிறது. முதல் டெஸ்ட் போட்டி மே 19-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள 17 வீரர்கள் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வீரர்கள் விபரம் வருமாறு :-

ஆங்கிலோ மேத்யூஸ் (கேபடன்), தினேஷ் சந்திமால் (துணை கேபடன்), தசுன் சானக, தம்மிக பிரசாத், தனஞ்சய சில்வா, தில்ருவான் பெரேரா, திமுத் கருணாரத்ன, துஷ்மன்த சமீரா, கவுஷால் சில்வா, குஷால் மெண்டீஸ், லகிரு திரிமன்னே, மலிந்த சிறிவர்த்தன, நிரோஷன் திக்வெல்ல, நுவான் பிரதீப், ரங்கன ஹேரத், சமிந்த எரங்க, சுரங்க லக்மல்.

Post a Comment

0 Comments